Connect with us

ஆமா தெலுங்கு படத்தை காபி அடிச்சிதான் படம் பண்ணுனேன்!.. என்ன இப்ப!.. ஓப்பனாக பேசிய சுந்தர் சி!.

sundar c

News

ஆமா தெலுங்கு படத்தை காபி அடிச்சிதான் படம் பண்ணுனேன்!.. என்ன இப்ப!.. ஓப்பனாக பேசிய சுந்தர் சி!.

Social Media Bar

தமிழில் தொடர்ந்து நகைச்சுவை திரைப்படங்களாக இயக்கி வந்தவர் இயக்குனர் சுந்தர் சி உள்ளத்தை அள்ளித்தா, முறைமாமன் மாதிரியான காமெடி திரைப்படங்களை இயக்கிய அதே சமயம் அருணாச்சலம், அன்பே சிவம் மாதிரியான வேறு வகை திரைப்படங்களையும் முயற்சி செய்தார் சுந்தர் சி.

தற்சமயம் தொடர்ந்து அரண்மணை என்னும் பேய் படத்தின் பாகங்களை வரிசையாக இயக்கி வருகிறார் சுந்தர் சி. அந்த வகையில் அவர் இயக்கி வெளி வர இருக்கும் திரைப்படம் அரண்மனை 4. இந்த திரைப்படத்திற்காக பேட்டி கொடுக்கும்போது சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டிருந்தார் சுந்தர்சி.

sundar C
sundar C

அவரது திரைப்படங்கள் சில காபி அடிக்கப்பட்டு எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் இருந்தன. அதுக்குறித்து அவரிடம் கேட்கும்போது ஆமாம் நான் தெலுங்கு படங்களை காபி அடித்து படம் எடுத்துள்ளேன். என்னுடைய திரைப்படங்கள் சிலவற்றை காபியடித்து அவர்கள் படம் எடுத்தனர்.

அவர்களை பழிவாங்க நானும் அவர்களது திரைப்படங்களை காபியடித்து படம் இயக்கினேன் என கூறியுள்ளார். அதே பேட்டியில் அமர்ந்திருந்த நடிகர் பிரசாந்த் கூறும்போது வின்னர் திரைப்படத்தை படமாக்கும்போது என்னிடம் 10 தெலுங்கு படங்களின் டிவிடிகளை கொடுத்தார்.

இந்த படத்தில் 5 படம்தான் வின்னர் படத்தின் முதல் பாதி. அடுத்த 5 படங்கள் படத்தின் இரண்டாம் பாதி என கூறினார். இவ்வாறு கூறியுள்ளார் நடிகர் பிரசாந்த்.

To Top