Tamil Cinema News
சம்பளமே வாங்காமல் நான் பண்ணுன படம்.. சுந்தர் சி இயக்கத்தில் மாஸ் ஹிட் கொடுத்த படம்..!
தமிழ் சினிமாவில் உள்ள காமெடி இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. எல்லா காலங்களிலும் தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருந்துக்கொண்டேதான் இருக்கும். ஆனால் அந்த மாதிரியான திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்கள் எண்ணிக்கையும் மிக குறைவாகவே இருக்கும்.
அந்த வகையில் தொடர்ந்து காமெடி படங்களாக இயக்கி மக்கள் மத்தியில் மிக பிரபலமாக இருந்தார் சுந்தர் சி. காமெடி படங்கள் என்று மட்டும் இல்லாமல் அவர் அருணாச்சலம் , அன்பே சிவம் மாதிரியான படங்களையும் இயக்கி இருக்கிறார்.
சமீப காலங்களாக பேய் படங்கள் மீது ஆர்வம் கொண்டு தொடர்ந்து பேய் படங்களாக இயக்கி வருகிறார் சுந்தர் சி. அப்படியாக அவர் இயக்கிய அரண்மனை படங்கள் எல்லாமே நல்ல வெற்றியை கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் சுந்தர் சி ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.
அதில் அவரிடம் நீங்கள் இயக்கிய திரைப்படங்களிலே உங்களுக்கு பிடித்த படம் என்ன என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுந்தர் சி. கண்டிப்பாக எனது முதல் படம் முறைமாமன் தான். அதுதான் எனக்கு இயக்குனராக ஒரு அடையாளத்தை கொடுத்தது.
அந்த படத்தை இயக்கும்போது அதற்கு நான் சம்பளமே வாங்கவில்லை. செலவுக்கு மட்டும் அவ்வப்போது தயாரிப்பாளர் பணம் தருவார் என கூறியுள்ளார் சுந்தர் சி.
