Connect with us

என் திரை வாழ்க்கையையே மாற்றியது அந்த விஜய் படம்தான்!.. சுந்தர் சி ஓப்பன் டாக்!..

sundar c vijay

News

என் திரை வாழ்க்கையையே மாற்றியது அந்த விஜய் படம்தான்!.. சுந்தர் சி ஓப்பன் டாக்!..

Social Media Bar

நடிகர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்களுக்கு எல்லாம் நல்ல வரவேற்புகள் இருந்து வருகின்றன. முறைமாமன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானாவர் சுந்தர். சி அதன் பிறகு வரிசையாக காமெடி திரைப்படங்கள் இயக்கியதன் மூலமாக அவர் பெரிதும் பிரபலமானார்.

ஆனால் அவை மட்டுமில்லாமல் அன்பே சிவம் மாதிரியான திரைப்படங்களையும் இயக்கியுள்ளார் சுந்தர் சி. என்னதான் காமெடி படம் இயக்கும் இயக்குனராக இருந்தாலும் ஆரம்பத்தில் அந்த ஆசையில் தமிழ் சினிமாவிற்கு இவர் வரவில்லை.

இதுக்குறித்து சுந்தர் சி கூறும்போது, நான் சினிமாவிற்கு வந்தப்போது மிகவும் எமோஷனலான சீரியஸான திரைப்படங்களை இயக்க வேண்டும் என நினைத்தேன். மணிரத்தினத்தையே புரட்டி போடும் ஒரு படத்தை எடுக்க நினைத்தேன். அப்போது என்னுடைய முதல் படத்தின் தயாரிப்பாளர் ஒரு தியேட்டர் முதலாளி ஆவார்.

sundar C
sundar C

அந்த திரையரங்குகளில் சில படங்களை வெளியாவதற்கு முன்பே போட்டு பார்ப்போம். அப்படியாக ஒரு படத்தை பார்த்தேன். அந்த படத்தை பார்த்தப்போது அதில் ரசிக்கும் வகையில் எதுவும் தெரியவில்லை. ஆனால் மறுநாள் மக்கள் பார்க்க துவங்கிய பிறகு அந்த படத்தை வெகுவாக ரசித்தனர் மக்கள்.

விஜய் நடித்த ரசிகன் திரைப்படம்தான் அது. அப்போதுதான் ஒரு முடிவு செய்தேன். எனக்கு பிடித்த மாதிரி படம் எடுப்பதை விடவும் மக்களுக்கு பிடித்த மாதிரியான கதையை படமாக்குவதுதான் சரி என எனக்கு தோன்றியது. அதன் பிறகுதான் நகைச்சுவை இயக்குனராக மாறினேன் என்கிறார் சுந்தர் சி.

To Top