Connect with us

சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு விபூதி அடித்த விஜய்!.. அட கொடுமையே

Cinema History

சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு விபூதி அடித்த விஜய்!.. அட கொடுமையே

Social Media Bar

Vijay and Sunpictures: சன்பிக்சர்ஸ் ஒரு மிகப்பெரிய தயாரிப்பு மற்றும் படம் விநியோக நிறுவனம். சன் குழுமத்தின் ஒரு பகுதி. இந்த குழு ஐபிஎல் கிரிக்கெட் அணி ஒன்றை கூட ஏலம் எடுத்து நடத்திக்கொண்டிருக்கிறது.

சன் பிக்சர்ஸ்ல் படம் வெளியாகிறது என்றால் பெரும்பாலும் பெரிய பட்ஜெட், பெரிய நடிகர்கள் படமாகத்தான் இருக்கும். சன்பிக்சர்ஸ் எப்போது சிந்தித்து தேர்ந்தெடுத்து படம் பண்ணக்கூடியவர்கள்.

இவர்கள் தயாரிப்பில் ஒரு சில படங்கள் மட்டுமே தோல்வியை தழுவியது. அவற்றில் மிக முக்கியமான படங்கள் நடிகர் விஜய் நடித்துள்ள படம். அந்த இரண்டு படங்களும் மக்களிடம் வரவேற்பு இல்லாமல் தோல்வியை தழுவியது.

சுறா மற்றும் வேட்டைக்காரன் விஜய்யின் திரை வாழ்வில் இந்த இரண்டு படங்கள் தான் மிகப்பெரிய தோல்வி என்றும் கூட கூறலாம். சன்பிக்சர்ஸ் மற்றும் விஜய் கூட்டணியில் நிறைய படங்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் தோல்வியில் முடிந்த இந்த இரண்டு படங்களுக்கு காரணம் கதைக்களம் சரியாக அமையவில்லை… ஆக்ஷன் என்ற பெயரில் மக்களின் எதிர்பார்ப்பை அவர்களால் பூர்த்தி செய்யமுடியவில்லை.

மேலும் இந்த நிறுவனம் எதிர்பார்த்த லாபத்தை இந்த இரண்டு படங்களும் பூர்த்தி செய்யவில்லை என்றுதான் கூற வேண்டும்.ஆனாலும் இந்த இரண்டு படங்கள் தவிர்த்து மற்ற படங்கள் இந்த நிறுவனத்திற்கு நல்ல லாபம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த நிறுவனம் ரஜினி போன்ற பெரிய நடிகர்களின் படங்களை தயாரித்து வந்தாலும் விஜய் தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத ஒரு நடிகர் அதனால் இப்பொழுதும் சன் பிக்சர்ஸ் அவருடன் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

To Top