Connect with us

வண்டி ஓட்ட தெரியுமா!.. அஜித்தையே ஆய்வு செய்த வெளிநாட்டு போலீஸ்…

ajith

Cinema History

வண்டி ஓட்ட தெரியுமா!.. அஜித்தையே ஆய்வு செய்த வெளிநாட்டு போலீஸ்…

Social Media Bar

தமிழ் சினிமாவில் அதிக வருமானம் வாங்கும் பெரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். கமல், ரஜினி, விஜய் வரிசையில் அஜித்திற்கும் முக்கிய  இடம் உண்டு. ஏனெனில் விஜய் ரஜினி படங்களை போலவே அஜித்தின் திரைப்படங்களுக்கும் ஒரு ரசிக்கப்பட்டாளம் உள்ளது அவரது திரைப்படமும் வெளியாகி பெரும் வெற்றியை கொடுக்கக் கூடியதாக உள்ளது. எனவே அஜித்திற்கும் தமிழ் சினிமாவில் பெரிய மார்க்கெட் உள்ளது.

 ஆனால் சினிமாவை விடவும் பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வமுடன் இருக்கிறார் அஜித். அவரது இளமை காலங்களில் இருந்தே பைக் கார் போன்ற வாகனங்களை ஓட்டுவதில் அதிக விருப்பம் அவருக்கு இருந்தது. இந்த நிலையில் தற்சமயம் விடாமுயற்சியின் படப்பிடிப்பு துவங்க இருந்தது ஆனால் அஜித் கடந்த சில மாதங்களாக பைக்கிலேயே உலகத்தை சுற்றி வந்து கொண்டிருந்ததால் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

 தற்சமயம் ஒரு வழியாக விடாமுயற்சியின் படப்பிடிப்பை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது இதற்காக துபாய்க்கு அருகில் உள்ள அபுதாபியில் படப்பிடிப்பை நிகழ்த்த உள்ளனர் இதற்காக அபுதாபியில் லைசன்ஸ் வாங்குவதற்கு முடிவெடுத்தார் அஜித். எனவே அவர் அபுதாபி போலீஸிடம் சென்ற பொழுது அங்கு அவரை எட்டு போட்டு காட்ட சொல்லியுள்ளனர் அபுதாபி காவல்துறையினர்.

 இது அஜித்துக்கு மிகுந்த அவமானமாக போய் உள்ளது இருந்தாலும் எட்டு போட்டு காட்டி லைசென்ஸ் வாங்கியுள்ளார் அஜித். 

To Top