ரஷ்ய படத்தில் நடித்த முதல் தமிழ் நடிகை பத்மினிதான்… இவ்வளவு நாள் தெரியாம போச்சே!..

Padmini on Russian Cinema: தமிழ் சினிமாவில் இப்போது உள்ள நடிகைகள் போல் அல்லாமல் பழைய சினிமா காலகட்டங்களில் நடிகைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஒரு திரைப்படத்தின் திரைக்கதை எழுதப்படும் பொழுது அதில் நடிகைகளுக்கான முக்கிய காட்சிகளும் எழுதப்பட்டுவிடும்.

இப்போதைய படங்களில் வருவது போல சும்மா பத்து நிமிடம் வந்துவிட்டு கதாநாயகி செல்வது போல காட்சி இருக்காது. எனவே கதாநாயகர்கள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார்களோ அதை அளவிற்கு அப்போது கதாநாயகிகளும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தனர்.

பத்மினி தமிழ் சினிமாவில் சிறப்பாக நடிக்கும் நடிகைகளில் முக்கியமானவர் ஆவார். இவர் சிவாஜியுடன் 50-க்கும் மேற்பட்ட படங்களிலும் எம்.ஜி.ஆருடன் பத்துக்கும் அதிகமான படங்கள்லும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் அவரது புகழ் பாலிவுட் வரை பரவி பாலிவுட்டில் ஒரு திரைப்படத்தில் வாய்ப்பை பெற்று நடித்தார்.

Social Media Bar

இந்த நிலையில் ரஷ்யாவில் ஒரு விழாவிற்கு பத்மினி சென்றிருந்த பொழுது அங்கு அவருக்கு ஒரு படத்தில் வாய்ப்பு கிடைத்தது. பரதேசி என்ற அந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இதனால் ரஷ்யாவில் அவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.

இந்த திரைப்படம் 1957ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படம் வெளியான பிறகு ரஷ்யாவில் பலர் அவர்களது குழந்தைகளுக்கு பத்மினி என்று பெயர் வைக்கும் அளவிற்கு அவர் ரஷ்யாவில் பிரபலமானாராம் இதை அப்போதைய காலகட்டத்தில் அவரே ஒரு பேட்டியில் கூறியும் இருக்கிறார்.