Cinema History
இப்ப உள்ள படம்லாம் என்ன பாக்ஸ் ஆபிஸ். அதையெல்லாம் தாண்டி ஹிட் கொடுத்த படங்கள் தெரியுமா?
தமிழ் சினிமாவில் தற்சமயம் 500 கோடி, 600 கோடி என படங்கள் ஹிட் அடிப்பது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி ஹிட் கொடுத்த படங்களும் தமிழ் சினிமாவில் உண்டு.
இப்போது 500 கோடி ஹிட் கொடுக்கும் படங்களை தயாரிப்பதற்கே 200 கோடி செலவாகிறது. 200 கோடிக்கு எடுத்து 500 கோடி ஹிட் எனும்போது பாதிக்கு பாதிதான் காசு கிடைக்கிறது. ஆனால் ஒரு காலத்தில் தயாரிப்பு செலவை விடவும் 10 மடங்கு லாபம் கொடுத்த திரைப்படங்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் உள்ளது.
அப்படியான சில படங்களை வினியோகஸ்தர் திருப்பூர் பாலசுப்பிரமணியம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
வைகாசி பொறந்தாச்சு
திருப்பூர் சுப்பிரமணியம் விநியோகஸ்தராக மாறி முதன் முதலாக வாங்கிய திரைப்படம் வைகாசி பொறந்தாச்சு. 12 ஆவது முடித்த கையோடு நடிகர் பிரசாந்த் நடித்த முதல் படம் இது. இருந்தாலும் இது நல்ல ஹிட் கொடுத்தது. அந்த படத்தை திருப்பூர் சுப்பிரமணியம் 3 லட்சத்து 90,000 ரூபாய்க்கு வாங்கினார். ஆனால் அந்த படம் 40 லட்சத்திற்கு ஓடி வசூல் சாதனை செய்தது.
உள்ளத்தை அள்ளித்தா
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக், கவுண்டமணி காம்போவில் உருவான நகைச்சுவை திரைப்படம் உள்ளத்தை அள்ளித்தா. இப்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படமாக இது உள்ளது. அந்த படம் 28 லட்சத்துக்கு வாங்கி வெளியிட்டுள்ளார்கள். ஆனால் படம் 2 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளது.
எனவே ஒரு படம் தோல்வி கண்டால்க்கூட அப்போதைய காலக்கட்டத்தில் அது தயாரிப்பாளர்களுக்கு சின்ன நஷ்டமாகவே இருந்துள்ளது. ஆனால் இப்போது பெரிய ஹீரோக்களுக்கே கோடி கணக்கில் சம்பளம் கொடுக்க வேண்டி இருப்பதால் தயாரிப்பாளர்களுக்கு சினிமா என்பது முள் மேல் நடப்பது போன்ற நிலையைதான் ஏற்படுத்தியுள்ளது.
