எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது!.. ஆனா இதுதான் கடவுளா இருக்க முடியும்!.. குட் நைட் மணிகண்டன் ஓப்பன் டாக்!.

சினிமாவில் வெகு காலங்களாகவே வாய்ப்பு தேடி வருபவர்களில் நடிகர் மணிகண்டன் முக்கியமானவர். பெரும்பாலும் மணிகண்டனின் நடிப்பு என்பது தத்ரூபமாக இருக்கும். அதுதான் அவருக்கு சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

இவர் காதலும் கடந்து போகும், காலா மாதிரியான திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கூட அவருக்கு அடையாளமான திரைப்படமாக அமைந்தது ஜெய் பீம் திரைப்படம்தான். இந்த திரைப்படத்தை தொடர்ந்து குட் நைட் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார் மணிகண்டன்.

manikandan
manikandan
Social Media Bar

இவர் பேட்டியில் கூறும்போது கடவுள் நம்பிக்கை குறித்து ஒரு விளக்கத்தை கொடுத்திருந்தார். அதில் அவர் கூறும்போது எனக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் கிடையாது. ஆனால் நான் கடவுள் என ஒரு விஷயத்தைதான் சொல்வேன்.

நாம் சினிமாவில் சிறப்பாக நமது வேலையை செய்து கொண்டிருக்கும்போது அங்குள்ளவர்களால் கவனிக்கப்படுகிறோம். அடுத்த சில நாட்களில் நம்மை பற்றி அவர்கள் மற்றவர்களிடம் பேசுகிறார்கள். அதன் மூலம் நமக்கு திரைப்படத்திற்கு வாய்ப்பு கிடைக்கிறது. இதுதான் கடவுள், அதிஷ்டம், விதி இப்படி ஏதோ ஒன்று என நினைக்கிறேன் என்கிறார் மணிகண்டன்.