Connect with us

கூட்ட நெரிசலில் ரசிகர்கள் செய்த சில்மிஷம்!., திருவிழாவில் சிக்கிய நடிகை லட்சுமி மேனன்!..

lakshmi-menon

News

கூட்ட நெரிசலில் ரசிகர்கள் செய்த சில்மிஷம்!., திருவிழாவில் சிக்கிய நடிகை லட்சுமி மேனன்!..

Social Media Bar

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து பிரபலமான நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை லெட்சுமி மேனன். சுந்தர பாண்டியன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான லெட்சுமி மேனனுக்கு முதல் படமே அதிக வரவேற்பை ஏற்படுத்தும் திரைப்படமாக அமைந்தது.

அந்த திரைப்படத்திற்கு அவருக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படம் கும்கி. கும்கி திரைப்படம் தமிழ் சினிமாவில் அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.

அதனை தொடர்ந்து தமிழில் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்ற லட்சுமி மேனன் தொடர்ந்து குட்டி புலி, பாண்டியநாடு, போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார் லெட்சுமி மேனன். இந்த நிலையில் 2015க்கு பிறகு லட்சுமி மேனனுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகளும் வரவேற்புகளும் குறைய துவங்கின.

இந்த நிலையில் சில காலங்கள் சினிமாவில் இருந்து காணாமல் போன லெட்சுமி மேனன் சந்திரமுகி 2 திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுத்தார். அதில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து மலை, சப்தம் ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் லட்சுமிமேனன் மல்லூர் அருகில் உள்ள வேங்காம்பட்டி பகுதியில் உள்ள கோவில் திருவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார். அங்கு சில பாடல்களுக்கு லட்சுமி மேனன் நடனமாட செய்தார். அப்போது உணர்ச்சி வசப்பட்ட ரசிகர்கள் மேடைக்கு ஓடி வர துவங்கினர்.

சட்டென எதிர்பாராமல் இப்படி நடந்ததால் அவர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் போலீசாருக்கு போதும் போதுமென ஆகிவிட்டது. இந்த நிலையில் போலீசாரிடம் இருந்து தப்பிய சில ரசிகர்கள் லெட்சுமி மேனனிடம் சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அங்கிருந்து பாதுக்காப்பாக தப்பிப்பதே லட்சுமி மேனனுக்கு பெரும் பாடாகிவிட்டது.

To Top