அந்த விஷயத்துல எந்த ஐடியாவும் இல்ல.. காதல் விவகாரத்தில் அதிர்ச்சி கொடுத்த சோயா.. அப்ப டி.டி.எஃப் நிலைமை?.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ஷாலின் சோயா. ஷாலின் சோயாவை பொருத்தவரை இதற்கு முன்பே டிடிஎஃப் வாசனின் காதலி என்று மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தவர்.

அவர் டி.டி.எஃப் வாசனோடு சேர்ந்து நிறைய வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இது இல்லாமல் தெலுங்கு சினிமாவில் திரைப்படங்களையும் இயக்கி வருகிறார் ஷாலின் சோயா. இந்த நிலையில்தான் இவருக்கு குக் வித் கோமாளியில் வாய்ப்பு கிடைத்தது.

ஷாலின் சோயா சர்ச்சை:

அதன் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தார் ஷாலின் சோயா மேலும் அவருக்கு விஜய் டிவியில் வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

ttfvasan_zoya

Social Media Bar

அடுத்து துவங்க இருக்கும் பிக் பாஸ் சீசன் எட்டிலும் சாலின் சோயா கலந்து கொள்ள இருப்பதாக ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. இதற்கு நடுவே சமீபத்தில் சித்தார்த்தின் திருமண புகைப்படங்களுக்கு கமெண்ட் ஒன்றை போட்டு இருந்தார்.

அதில் எனக்கு திருமணம் செய்ய விருப்பமில்லை ஆனால் திருமணம் செய்தால் இந்த மாதிரி தான் செய்வேன். என்று கூறியிருந்தார் ஆனால் தற்சமயம் இவர் டிடி.ர்ஃப் வாசனை காதலித்து வருகிறார். அப்படி என்றால் அவர் டிடிஎஃப் வாசனை திருமணம் செய்து கொள்ள மாட்டாரா? என்று கேள்விகள் எழ துவங்கியிருக்கின்றன. ரசிகர்கள் பலரும் இதுகுறித்து தற்சமயம் பேச துவங்கி இருக்கின்றனர்.