News
1 லட்சத்துக்கு வாங்கியும் பத்தல.. எப்புடி பத்தும்.. அந்த பொருளை போய் அதிக காசுக்கு வாங்கிய மாளவிகா
தமிழ் சினிமாவில் கருப்பு அழகிகளாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை மாளவிகா. இயக்குனர் சுந்தர் சி மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார் மாளவிகா.
அஜித் கதாநாயகனாக நடித்த உன்னைத்தேடி திரைப்படத்தில் மாளவிகா என்னும் பெயரிலேயே ஆறுமுகமானதால் இவரது பெயர் மாளவிகா என்று ஆனது. ஆனால் அதற்கு முன்பு ஸ்வேதா குன்னூர் என்பதுதான் இவரது பெயராக இருந்தது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் வாய்ப்பை பெற்றார் மாளவிகா. அதில் வெற்றி கொடி கட்டு, லவ்லி போன்ற சில திரைப்படங்கள் முக்கியமான திரைப்படங்கள் என்று கூறலாம்.
முக்கியத்துவம் பெற்ற நடிகை:
நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு நடிகையாக இருந்ததால் இவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் புது நடிகைகள் வரத் வாங்கிய பிறகு இவருக்கான வாய்ப்பு என்பது குறைய தொடங்கியது.

ஐயா திரைப்படத்தில் கூட நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார் ஆனால் ஒரு சின்ன கதாபாத்திரத்தில்தான் அதில் மாளவிகா நடித்திருந்தார். அந்த அளவிற்கு அவருக்கான மார்க்கெட் என்பது குறைந்து போனது.
பிறகு மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் வால மீனுக்கும் வெலங்கு மீனுக்கும் என்கிற பாடலில் ஐட்டம் பாடலுக்கு வருகிற அளவு அவருடைய மார்க்கெட் குறைந்தது.
மாளவிகா செய்த செலவு:
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும் பொழுது அவரிடம் உங்கள் வாழ்க்கையிலேயே ஒரு பொருள் வாங்கி அதை ஏன் வாங்கினோம் என்று யோசிக்கும் அளவிற்கான நிகழ்வு நடந்திருக்கிறதா? என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த மாளவிகா ஆமாம் அப்படியான ஒரு நிகழ்வு நடந்துள்ளது. ஒரு லட்ச ரூபாய் கொடுத்து ஒரு ஷூ வாங்கினேன் கடைசில அந்த ஷூ எனக்கு அவ்வளவு ஏற்புடையதாகவே இல்லை. ஒரு விளம்பரத்தில் நடித்ததன் மூலமாக வந்த முழு பணத்தையும் கொடுத்து அந்த ஷூவை வாங்கினேன்.
ஆனால் என் வாழ்க்கையிலேயே செய்த முட்டாள்தனம் அதை வாங்கியதுதான் என்று பிறகு தெரிந்தது என்று கூறுகிறார் மாளவிகா. பலர் இங்கு உணவுக்கே கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பொழுது பிரபலங்கள் தண்ணி மாதிரி செலவு செய்கிறார்கள் பாருங்கள் என்று இது குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
