Connect with us

குழந்தையை முதலையிடம் விட்டு நகைகளை பத்திரப்படுத்திய தாய்!.. பாக்கியராஜ் கூறும் இன்னொரு சர்ச்சை கதை!..

bhagyaraj

News

குழந்தையை முதலையிடம் விட்டு நகைகளை பத்திரப்படுத்திய தாய்!.. பாக்கியராஜ் கூறும் இன்னொரு சர்ச்சை கதை!..

Social Media Bar

Director Bhagyaraj: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் லோகேஷ் கனகராஜை விடவும் பல மடங்கு பிரபலமாக இருந்தவர்தான் நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ். ஒவ்வொரு பிரபலத்திற்கும் சில காலங்களுக்கு பிறகு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும்.

அப்படியாக தமிழ் சினிமாவில் பாக்கியராஜுக்கும் வாய்ப்புகள் குறைய துவங்கின. இதனை தொடர்ந்து தற்சமயம் இவர் தனக்கென யூ ட்யூப் சேனல் துவங்கி அதில் தனது சினிமா தொடர்பான வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்.

இந்த நிலையில் நெஞ்சு பொறுக்குதில்லையே என்கிற பெயரில் அவர் சில சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து வீடியோ வெளியிடுகிறார். சில நாட்களுக்கு முன்பு பாக்கியராஜ் அப்படி வெளியிட்ட ஒரு வீடியோ மிகவும் சர்ச்சைக்குள்ளானது.

அதில் பாக்கியராஜ் பேசும்போது மேட்டுப்பாளையம் அருகில் ஆற்றில் குளிக்கும் நபர்களை கொலை செய்யும் நபர் பற்றி கூறியிருந்தார். இந்த நிலையில் தற்சமயம் மற்றுமொரு சர்ச்சை கதையை கூறியிருந்தார்.

bhagyaraj
bhagyaraj

இந்த கதை வட இந்தியாவில் நடந்த நிகழ்வாகும். வட இந்தியாவில் ஒரு பகுதியில் ஆற்றின் மறுகரையை கடப்பதற்கு பரிசிலில் ஏறிதான் கடக்க வேண்டும் என்கிற நிலை. அங்குள்ள மக்கள் வெகு நாட்களாகவே அங்கு பாலம் கட்டி கேட்டு கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் ஒரு நாள் நிறைய மக்கள் அந்த பரிசலில் ஏறி சென்று கொண்டுள்ளனர். அதில் ஒரு குழந்தையும் அதன் தாயும் இருக்கின்றனர். அப்போது அந்த குழந்தை விளையாட்டாக தண்ணீரில் கையை வைத்து விளையாடி வருகிறது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக ஒரு முதலை அந்த குழந்தையின் கையை கவ்வி பிடித்துவிடுகிறது.

உடனே முதலையிடம் இருந்து குழந்தையை பெற்றோர்கள் இழுக்கின்றனர். ஆனால் முதலை பிடியை விடுவதாய் இல்லை. இதனால் அந்த பரிசலே ஆட துவங்குகிறது. முதலை பிடியை விடாது எனவே குழந்தையை முதலையிடமே கொடுத்துவிடுங்கள். இல்லையென்றால் பரிசல் கவிழ்ந்துவிடும் என பரிசல் ஓட்டுபவர் எச்சரிக்கை செய்கிறார்.

அப்படியும் சில நிமிடம் போராடிய பிறகு இனி குழந்தையை காப்பாற்ற முடியாது என பெற்றோருக்கே தெரிகிறது. உடனே அவர்கள் குழந்தை போட்டிருந்த தங்க நகைகளை எடுத்துக்கொண்டு அதை முதலையிடமே விட்டு விடுகின்றனர். இந்த கதையை கூறிய பாக்கியராஜ், ஒரு தாய் அந்த நிலையில் கூட நகைக்கு இப்படி முக்கியத்துவம் கொடுக்கலாமா என பேசியிருந்தார். இந்த வீடியோ தற்சமயம் ட்ரெண்டாகி வருகிறது.

To Top