Tamil Cinema News
ஸ்டண்ட் மேனுக்கு சம்பளம் இவ்வளவுதானா? தொடர்ந்து ஊழியர்களை ஏமாற்றும் தமிழ் சினிமா..!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து சின்ன ஊழியர்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்பது இப்பொழுது அதிகமாக பேசப்பட்டு வருகிறது. நேற்று வேட்டுவன் என்கிற படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது அதில் சண்டைக் காட்சிகளில் நடித்த எஸ்.எம் ராஜு என்பவர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்து இருக்கிறார்.
இது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தற்சமயம் இதில் பல விஷயங்கள் கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. முக்கியமாக சின்ன தொழிலாளிகளின் பாதுகாப்பு அம்சங்கள் மீது தயாரிப்பாளர்கள் கவனம் செலுத்துவதில்லை என்று கூறப்படுகிறது.
உயிருக்கு ஆபத்தான காட்சிகளில் நடிகர்கள் நடிக்கும் போது அவர்களுக்கான சம்பளம் என்பது அதிகமாக கொடுக்கப்படுவதில்லை. சாதாரணமாக கொடுக்கப்படும் சம்பளத்திலிருந்து 5000 அல்லது 10,000 ரூபாய் அதிகமாக கொடுக்கப்படுகிறது.
300 கோடி வரை பட்ஜெட்டில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் உயிரை பணயம் வைத்து நடிக்கும் சண்டை காட்சி நடிகர்களுக்கு இவ்வளவு குறைவான சம்பளம் கொடுக்கப்படுவது பெரிய அநீதியாக பார்க்கப்படுகிறது.
மேலும் எந்த ஒரு படப்பிடிப்பு தளங்களிலும் இதுவரை பெரிய நடிகர்களுக்கு இந்த மாதிரி அசம்பாவிதங்கள் நடந்ததில்லை என்னும் போது சின்ன நடிகர்களுக்கு மட்டும் ஏன் பாதுகாப்பு அம்சங்கள் இப்படி இல்லாமல் இருக்கிறது என்றும் கேள்விகள் இருக்கின்றன.
