Tamil Cinema News
எனக்கு இருக்கும் அரசியல் ஆர்வம் இதுதான்.. நண்பர் விஜய்க்கு வாழ்த்துக்கள்.. ஓப்பன் டாக் கொடுத்த அஜித்.!
நடிகர் விஜய்யை போலவே நடிகர் அஜித்தும் தமிழ் சினிமாவில் பெரு வாரியான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இருவரில் யாருக்கு ரசிகர்கள் அதிகம் என்பதில்தான் விஜய் அஜித் ரசிகர்கள் இடையே போட்டி இருந்து வரும். அந்த அளவிற்கு செல்வாக்கு மிக்க நடிகர் என்றாலும் பொதுவெளியில் அஜித்தை அவ்வளவாக பார்க்க முடியாது.
விருது வழங்கும் விழா, படத்தின் ப்ரோமோஷன் என எதிலுமே அஜித்தை பார்க்க முடியாது. அவரின் கடந்த கால வாழ்க்கையே அதற்கு காரணம். சினிமாவில் ஆரம்பத்தில் அரசியல் மீது எல்லாம் அஜித்திற்கு ஆர்வம் இருந்தது.
அந்த சமயங்களில் மேடைகளில் பேசும்போது அஜித் விளையாட்டாக பேசும் பல விஷயங்களை பத்திரிக்கைகள் மிகைப்படுத்தி எழுதின. இதனால் அஜித்திற்கு பட வாய்ப்புகளில் கூட பிரச்சனை ஏற்பட்டது. அதற்கு பிறகுதான் அஜித் பத்திர்க்கைகளில் பேசுவதை நிறுத்தினார்.
இந்த நிலையில் வெகு காலங்கள் கழித்து தற்சமயம் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் அஜித். அதில் அவரிடம் அரசியல் சார்ந்து சில கேள்விகள் கேட்கப்பட்டது. உங்களுக்கு அரசியல் மீது ஆர்வம் இருக்கிறதா? நடிகர்கள் அரசியலுக்கு வருவதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அஜித் கூறும்போது அரசியல் மீது எனக்கு பெரிய ஆர்வம் கிடையாது. ஆனால் அரசியலுக்கு செல்வதற்கு தனிப்பட்ட பெரிய தைரியம் தேவை. ஒரு நாட்டின் அல்லது ஒரு மாநிலத்தின் பொறுப்பை தலையில் சுமக்க தயாராய் இருப்பது மிகப்பெரிய பொறுப்பாகும்.
எனவே அரசியலுக்கு நடிகர்கள் வர நினைப்பது அவர்களது தனிப்பட்ட விருப்பம். என கூறிய அஜித் அரசியலுக்கு வந்துள்ள தனது நண்பர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
