நகைச்சுவை நடிகர் போண்டா மணி திடீர் மரணம்!..

Bonda Mani : தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் போண்டா மணி. அதிகமாக இவரை வடிவேலு காமெடிகளில் பார்க்க முடியும். பாக்கியராஜ் கதாநாயகனாக நடித்த பவுனு பவுனுதான் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் போண்டா மணி.

அதன் பிறகு வடிவேலுவுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட தொடர்ந்து வடிவேலு காமெடிகளில் நடித்து வந்தார். சென்னையில் உள்ள பொழிச்சலூரில் போண்டா மணி தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Social Media Bar

இந்த நிலையில் நேற்று இரவு திடீரென தனது வீட்டில் மயங்கி விழுந்துள்ளார் போண்டா மணி, உடனே அவரை அழைத்து சென்ற குடும்பத்தார் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்துள்ளனர். இந்நிலையில் அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

சிறுநீரகம் இரண்டும் செயலிழந்ததால்தான் இவர் இறந்துள்ளார் என கூறப்படுகிறது. இவரின் திடீர் மரணம் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் அவரது இல்லத்தில் இன்று இறுதி சடங்கு நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.