Cinema History
25 ஆவது திரைப்படத்தில் டொக்கு வாங்கிய பெரும் நடிகர்கள்!.. இவரெல்லாம் லிஸ்ட்ல இருக்காரா!..
ஒவ்வொரு கதாநாயகனாக நடிக்கும் நடிகர்களுக்கும் அவர்களது 25வது திரைப்படம் என்பது முக்கியமான திரைப்படமாகும். ஏனெனில் அந்த 25 ஆவது படத்தை தொடுவதற்கு அவர்கள் வெகுவாகா போராடி இருப்பார்கள். 25 வது படம் நடிக்கும்போது அவர்களது மார்க்கெட் உயர்ந்திருக்கும்.
அதே சமயம் அந்த 25 வது படம் நல்ல வெற்றியை கொடுக்க வேண்டும். எனவே எப்போதும் நடிகர்கள் தங்களது 25 ஆவது படத்தை தேர்ந்தெடுத்துதான் நடிப்பார்கள். தற்சமயம் நடிகர் கார்த்தியின் 25 ஆவது படமான ஜப்பான் திரைப்படமும் திரையரங்கில் ஓடி வருகிறது.
பல நடிகர்களுக்கு தங்களது 25 ஆவது திரைப்படம் தோல்வியை கண்டுள்ளது. அதில் முதலாமானவர் விஜய். Vijay : விஜய்யின் 25 ஆவது திரைப்படம் 2000 ஆம் ஆண்டு வந்த கண்ணுக்குள் நிலவு திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஃபாசில் இயக்கினார். ஆனால் இது வெற்றியடையவில்லை.
இரண்டாவது ஆர்யா. (Arya) ஆர்யா பாஸ் என்கிற பாஸ்கரன் மாதிரியான திரைப்படங்களை கொடுத்த போதிலும் அவரது 25 ஆவது திரைப்படமான வி.எஸ்.ஒ.பி திரைப்படம் வெகுவாக வரவேற்பை பெறவில்லை. பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ராஜேஷ்தான் இந்த படத்தையும் இயக்கினார்.
அதே போல விஜய் சேதுபதி (vijay sethupathi) தனது 25 ஆவது திரைப்படமாக சீதக்காதி என்னும் திரைப்படத்தில் நடித்தார். நல்ல கதைக்களத்தை கொண்ட திரைப்படம் என்றாலும் கூட ஏனோ அந்த படம் வெற்றியடையவில்லை. நடிகர் விஷாலுக்கு (vishal) 25வது படமாக சண்டைக்கோழியின் இரண்டாம் பாகம் அமைந்தது.
விஷாலுக்கு பெரும் வெற்றியை பெற்றுக்கொடுத்த சண்டைக்கோழி படத்தை எடுத்த இயக்குனர் லிங்குசாமிதான் இந்த படத்தையும் இயக்கினார். ஆனால் இது வெற்றியடையவில்லை. அடுத்து நடிகர் ஜெயம் ரவிக்கும் (Jayam Ravi) இதே சம்பவம் நடந்தது.
ஜெயம் ரவி நடித்து வெகு புரட்சிகரமாக எடுக்கப்பட்ட திரைப்படம் பூமி. இதுதான் அவரது 25 வது திரைப்படம். இந்த திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது மட்டுமின்றி அதிக விமர்சனத்துக்கும் உள்ளானது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்