Connect with us

இது வரைக்கும் யாரும் பண்ணுனதே இல்லை!.. ரஜினி படத்திற்காக லோகேஷின் ப்ளான்!.. இது ஒண்ணு போதும் படம் ஹிட்டு!.

rajinikanth new

News

இது வரைக்கும் யாரும் பண்ணுனதே இல்லை!.. ரஜினி படத்திற்காக லோகேஷின் ப்ளான்!.. இது ஒண்ணு போதும் படம் ஹிட்டு!.

Social Media Bar

Lokesh Kanagaraj Rajini Movie: தற்சமயம் சினிமாவில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். தமிழில் வேறு எந்த ஒரு இயக்குனரும் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய இடத்தை பிடித்திருக்க மாட்டார்கள் எனக் கூறலாம்.

அந்த அளவிற்கு தமிழ் சினிமாவிற்கு வந்து தனது இரண்டாவது திரைப்படம் மூலமாகவே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் போதை பொருள் சார்ந்த திரைப்படங்களாகவே இருந்து வருகின்றன.

ஆனால் தற்சமயம் அடுத்து லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து எடுக்க இருக்கும் திரைப்படம் அப்படியான கதை அம்சத்தைக் கொண்டிருக்காது என கூறப்படுகிறது. ஏனெனில் ரஜினிகாந்த் அப்படியான கதை அம்சத்தை வைத்து எனக்கு படம் வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

மேலும் எல்.சி.யூ வில் தனது திரைப்படம் இடம் பெறக் கூடாது என்பதும் ரஜினியின் விதிமுறையாக இருக்கிறது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் ரஜினிக்காக முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையை எழுதி வருகிறார் இது குறித்து பேட்டியில் அவர் ஒரு முறை கூறும் பொழுது இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவராத ஒரு கதையாக இந்த திரைப்படம் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

இதற்கு நடுவே தற்சமயம் அந்த படத்தில் முழுக்க முழுக்க கிராபிக்ஸ் வேலைப்பாடுகள் மூலமாக ரஜினியை இளமையாக காட்ட போவதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. அதாவது தளபதி திரைப்படத்தில் ரஜினி எப்படி இருந்தாரோ அதேபோல இந்த திரைப்படத்திலும் கொண்டு வரப் போவதாக கூறப்படுகிறது. அதை மட்டும் லோகேஷ் கனகராஜ் சரியாக செய்து விட்டால் அந்த ஒரு விஷயமே ரஜினிகாந்தின் திரைப்படத்தை ஆயிரம் கோடிக்கு கூட ஓட வைக்க வாய்ப்பிருக்கிறது என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

Articles

parle g
madampatty rangaraj
To Top