Connect with us

தளபதியையே மரியாதை இல்லாம பேசுறியா!.. மிஸ்கினுக்கு எதிராக ரசிகர்கள் செய்த ரகளை…

mysskin vijay

Cinema History

தளபதியையே மரியாதை இல்லாம பேசுறியா!.. மிஸ்கினுக்கு எதிராக ரசிகர்கள் செய்த ரகளை…

Social Media Bar

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஸ்கின். ஒரு சில இயக்குனர்கள் தங்கள் படம் என தெரிய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அவர்களது திரைப்படங்களில் சில விஷயங்களை செய்து வருவார்கள்.

அதே மாதிரியான விஷயங்களை மிஸ்கினும் தனது படங்களில் செய்து வருகிறார். ஒரு இயக்குனராக சம்பாதித்ததை விடவும் நடிகராக அதிக வருமானம் ஈட்டுகிறார் மிஸ்கின் என கூறப்படுகிறது. எனவே படத்தை இயக்குவதை காட்டிலும் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

தற்சமயம் மாவீரன் திரைப்படத்தில் இவர் நடித்த வில்லன் கதாபாத்திரம் கூட நல்ல வரவேற்பை பெற்றது. தற்சமயம் லியோ திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஒரு மேடையில் பேசும்போது விஜய்யை அவன் இவன் என மிஸ்கின் பேசிவிட்டார். பொதுவாக அவர் பலரையும் அப்படிதான் பேசுவது வழக்கம். ஆனால் இது தளபதி ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோபமான ரசிகர்கள் மிஸ்கினுக்கு ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை தயார் செய்து அதை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து ட்ரண்டாக்கி வருகின்றனர்.

To Top