Connect with us

வீடு கொடுத்து நடிகையிடம் இடம் பிடித்த நடிகர்.. இப்போ பசங்க மத்தியில் பிரச்சனை!..

tamil actress

Gossips

வீடு கொடுத்து நடிகையிடம் இடம் பிடித்த நடிகர்.. இப்போ பசங்க மத்தியில் பிரச்சனை!..

Social Media Bar

சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு தற்போது பெரும் பிரச்சனையாக இருந்து வருவது அட்ஜஸ்ட்மென்ட். சினிமா என்றாலே சர்ச்சை, கிசுகிசு, வதந்தி என அனைத்தும் உலாவிக் கொண்டு தான் இருக்கும்.

ஆனால் சமீபத்தில் பல பேட்டிகளிலும் பங்கேற்கும் நடிகைகள், தங்களுக்கு நடந்த அனுபவங்களை பற்றி வெளிப்படையாகவே பேட்டிகளில் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள். ஒரு சில நடிகைகள் தைரியமாக சினிமாவில் இதுபோன்ற அட்ஜஸ்ட்மெண்ட் நடக்கிறது எனக் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருந்த ஒருவர், பிரபல நடிகை ஒருவருக்கு வீடு கட்டி கொடுத்திருப்பது, அந்த விஷயம் தற்போது அவரின் குடும்பத்திற்கு தெரிய வந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பிரச்சனை தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி வருகிறது.

பிரபல முன்னணி காமெடி நடிகர்

தமிழ் சினிமாவின் சீனியர் காமெடி நடிகராக இருந்து வருபவர் இவர். ஏராளமான திரைப்படங்களில் நடித்து மக்களிடையே புகழ்பெற்றார். இவரை சுற்றி எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் பெண்கள் விஷயத்தில் இவர் அடிக்கடி சர்ச்சையில் உள்ளாக்கப்படுவார். மேலும் இவரைப் போன்ற ஒரு காமெடி நடிகர் இனி யாரும் வர முடியாது என்கிற அளவிற்கு இவரின் நகைச்சுவை மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும்.

gossip

இவ்வாறு பல திறமைகளை கொண்ட இந்த காமெடி நடிகர், பெண்கள் விஷயத்தில் சற்று வீக்கானவர் என காலங்காலமாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு உதாரணமாக தன்னுடன் நடிக்கும் துணை நடிகைகளையும், முன்னணி ஹீரோயின்களையும் கூட இவர் தன்னுடைய வலையில் விழ வைத்து விடுவாராம்.

முன்னணி நடிகைக்கு பரிசாக வழங்கப்பட்ட வீடு

தற்போது இவரைப் பற்றிய புதிய சர்ச்சை ஒன்று கிளம்பி இருக்கிறது. இந்த காமெடி நடிகர் நடித்த படங்களில் நடித்த மூன்றெழுத்து நடிகை உடன் நெருக்கமாக இருந்து வந்ததாகவும், இதனால் அந்த மூன்றெழுத்து நடிகைக்கு பிரம்மாண்ட வீடு ஒன்றை சென்னையில் கட்டி பரிசாக வழங்கியிருக்கிறார்.

மேலும் பல நாட்களாக அந்த வீட்டில் இந்த காமெடி நடிகரும், அந்த நடிகையும் ஒன்றாக தங்கி இருக்கிறார்கள். ஆனால் இந்த பிரபல காமெடி நடிகருக்கு வயதான பிறகு அந்த மூன்றெழுத்து நடிகை வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்

gossip

இறுதியாக குடும்பத்தில் மாட்டிய காமெடி நடிகர்

தற்போது காமெடி நடிகரின் வாரிசுகள் காமெடி நடிகருடைய சொத்துக்களின் விவரங்களை பார்க்கும் போது அந்த காமெடி நடிகர், பிரபல மூன்றெழுத்து நடிகைக்கு வீடு கட்டிக்கொடுத்த விஷயம் தெரிய வந்திருக்கிறது.

இப்போது அவரின் வாரிசுகள் அந்த வீட்டை அந்த நடிகையிடம் திருப்பி கேட்பதாகவும், இல்லையென்றால் அந்த வீட்டிற்குரிய பணத்தை கொடுங்கள் எனவும் கேட்கிறார்கள். ஆனால் அதை எல்லாம் தர முடியாது என்று அந்த நடிகை மறுத்து விட்டதாக கூறப்பட்டு வரும் நிலையில், நீங்கள் கொடுக்கவில்லை என்றால் சட்டப்படி நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்வோம் என அந்த நடிகைக்கு முன்னணி காமெடி நடிகரின் வாரிசுகள் எச்சரிக்கை கொடுத்துள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top