Connect with us

என் தாத்தாவோட கதையை சிவாஜியை வச்சு எடுத்தேன்.. புகழ் தேட இயக்குனர் செய்த வேலை!..

Cinema History

என் தாத்தாவோட கதையை சிவாஜியை வச்சு எடுத்தேன்.. புகழ் தேட இயக்குனர் செய்த வேலை!..

Social Media Bar

Sivaji ganesan movie: தமிழ் சினிமாவில் 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஓய்வு இல்லாமல் தினசரி தொடர்ந்து நடிக்க கூடியவர்கள் சிவாஜி கணேசன். கிட்டத்தட்ட ஒரே வருடத்தில் அவர் நடித்த 12 திரைப்படங்கள் வரை கூட வெளிவந்திருக்கிறது.

அந்த அளவிற்கு நடிப்பை சுவாசமாகக் கொண்டவர் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசன் நடித்து 1968 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் எங்க ஊர் ராஜா. இந்த திரைப்படத்திற்க்கு பின்னால் ஒரு கதை உண்டு. இந்த திரைப்படத்தை பி. மாதவன் என்கிற இயக்குனர்தான் இயக்கினார்.

உண்மையில் அந்த கதை எங்கு உருவானது என்றால் பி மாதவனின்  கொள்ளு தாத்தாவிடம் இருந்து உருவானது. பி மாதவனின் கொள்ளு தாத்தா மிகப்பெரிய பணக்காரராக இருந்தார். ஆனால் அவர் மூலமாக அந்த சொத்துக்கள் அழிந்துவிட்டன.

அப்போது பி மாதவனின் தாத்தா அந்த சொத்துக்களை திரும்ப பெறுவதற்கு அதிக முயற்சி செய்தார். இந்த கதைகளை எல்லாம் அறிந்த பி மாதவன் இதையே கதைகளமாக கொண்டு ஒரு படத்தை எடுக்கலாம் ஏனெனில் சென்ற தலைமுறையில் சொத்துக்களை இழந்த மக்கள் அதிகமாகவே இருப்பார்கள்.

அவர்கள் அனைவருக்குமே அவர்கள் வாழ்க்கையை கூறுவது போல இந்த படம் இருக்கும் என்று நினைத்த மாதவன் அதை திரைப்படமாக எடுத்தார் ஒரு வகையில் தனது கொள்ளு தாத்தாவின் புகழை ஒரு வெளிக் காட்டுவதற்கும் அவர் அந்த படத்தை எடுத்தார் என்று கூறப்படுகிறது.

To Top