இனிமே நாகேஷ் கூட மட்டும் சேர்ந்து நடிக்கவே மாட்டேண்டா சாமி!.. தெறித்து ஓடிய இயக்குனர்!..
Actor Nagesh : கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பல காமெடி நடிகர்களில் நாகேஷும் ஒருவர். இப்போது இருப்பதை விட அப்போது முக்கியமான காமெடி நடிகர்கள் பலர் இருந்தனர்.
தங்கவேலு, தேங்காய் சீனிவாசன், சந்திரபாபு, சுருளிராஜன் இப்படியான பல காமெடி நடிகர்களில் நாகேஷ் முக்கியமானவர். நாகேஷ் நடித்த திரைப்படங்களில் காதலிக்க நேரமில்லை, திருவிளையாடல், சர்வர் சுந்தரம் போன்ற சில படங்கள் குறிப்பிடத்தக்க படங்களாக அமைந்திருக்கின்றன.
அதற்கு காரணம் அதில் அவர் காண்பித்த தனிப்பட்ட நடிப்பு என்று கூறலாம். திருவிளையாடல் திரைப்படத்தில் தருமி என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடித்த நடிப்பு இப்போது வரை மக்கள் மத்தியில் பேசப்படும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது.

அந்த திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் ஏ.பி நாகராஜன் அவர்தான் அந்த திரைப்படத்தில் நாகேஷின் வசனங்களை எழுதி கொடுத்தார். ஆனால் நாகேஷ் அதை அவருடைய பாணியில் பேசும் பொழுது அந்த வசனத்திற்கு தனி சிறப்பு வந்தது என்று ஏபி நாகராஜன் ஒருமுறை கூறியிருக்கிறார்.
அந்த படத்தில் நக்கீரன் கதாபாத்திரத்தில் இயக்குனர் ஏபி நாகராஜன் நடித்தார். அப்படி நடிக்கும் பொழுது ஒரு காட்சியில் உங்களுடைய பாடலில் பிழை இருக்கிறது என நக்கீரன் கதாபாத்திரம் கூறும்பொழுது அதற்கு எவ்வளவு பிழை இருக்கிறதோ அதற்கு ஏற்ப பரிசு தொகையை குறைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருப்பார் நாகேஷ்.
அதைக் கேட்ட உடனேயே ஏபி நாகராஜனுக்கு தாங்க முடியாத சிரிப்பு வந்துள்ளது. இருந்தாலும் அடக்கி கொண்டு அந்த காட்சியை நடித்த ஏபி நாகராஜன் பிறகு கூறும் பொழுது இனி நாகேஸோடு மட்டும் சேர்ந்து நடிக்கவே மாட்டேன் அவர் என்னை சிரிக்க வைத்து விடுவார் போலிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.