Connect with us

காலேஜ் படிச்சப்ப உங்க படத்தை பார்த்துதான் இப்ப இந்த நிலைல நிக்கிறேன்!.. கௌதம் மேனனுக்கு பதிலளித்த ரசிகர்!..

gautham menon

News

காலேஜ் படிச்சப்ப உங்க படத்தை பார்த்துதான் இப்ப இந்த நிலைல நிக்கிறேன்!.. கௌதம் மேனனுக்கு பதிலளித்த ரசிகர்!..

Social Media Bar

இயக்குனர் மணிரத்தினம் போலவே தமிழ் சினிமாவில் காதல் திரைப்படங்களை சிறப்பாக இயக்கக்கூடியவர் இயக்குனர் கௌதம் மேனன். கௌதம் மேனன் காதல் மற்றும் க்ரைம் கதைகளை படமாக்குவதில் சிறப்பான இயக்குனராக அறியப்படுகிறார்.

அவரது க்ரைம் திரைப்படங்களில் கூட காதலுக்கு என்று தனியாக இடம் இருக்கும். இப்போது இயக்குனராகும் பலருக்கும் கல்லூரி காலக்கட்டங்களில் பெரும் முன்னுதாரணமாக இருந்தவர் கௌதம் மேனன். அதில் அதிகமாக பலரையும் பாதித்த திரைப்படம் வாரணம் ஆயிரம்.

gautham-menon1
gautham-menon1

ஒருமுறை வெற்றிமாறன் பேட்டியில் கூறும்போது வாரணம் ஆயிரம் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்த பிறகு நான் புகை பிடிக்கும் பழக்கத்தை அன்றோடு கை விட்டேன் என கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று கவின் நடிக்கும் ஸ்டார் படத்தின் ட்ரைலர் வெளியானது.

இந்த திரைப்படத்தின் ட்ரைலரை பார்த்த கௌதம் மேனன் இந்த படம் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன் அனைவரும் ட்ரைலரை பாருங்கள். இதை நான் விளம்பரத்திற்காக சொல்லவில்லை என கூறியிருந்தார்.

 அதற்கு பதிலளித்த படத்தின் இயக்குனரான எலான் நான் கல்லூரி படிக்கும்போது வாரணம் ஆயிரம் திரைப்படத்தை எனது பெற்றோர்களுடன் பார்த்தேன். அந்த நாளில் நான் ஒரு முடிவெடுத்தேன். ஒரு திரைப்படத்தை இயக்கி அதை எனது தந்தைக்கு சமர்பிக்க வேண்டும் என்று, அந்த திரைப்படம்தான் ஸ்டார் என அவருக்கு பதிலளித்துள்ளார்.

To Top