Connect with us

அஜித்தோட எதுக்கு போட்டோ எடுத்தீங்க!.. தொழிலாளரை வீட்டுக்கு அனுப்பிய படக்குழு!.. அடக்கொடுமையே..

Ajithkumar

News

அஜித்தோட எதுக்கு போட்டோ எடுத்தீங்க!.. தொழிலாளரை வீட்டுக்கு அனுப்பிய படக்குழு!.. அடக்கொடுமையே..

Social Media Bar

Ajithkumar vidamuyarchi :  தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமான நடிகர் அஜித்குமார். ஒவ்வொரு ரசிகனுக்கும் இருக்கும் பெரும் ஆசை என்னவென்றால் தனக்கு பிடித்த நடிகருடன் ஒரு போட்டோவாவது எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

விஜய் சேதுபதி மாதிரியான சில நடிகர்கள் படப்பிடிப்பு தளங்களில் இருக்கும் தொண்டர்களை தங்களுடன் அழைத்து போட்டோ எடுத்துக் கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் நடிகர் அஜித்தும் படப்பிடிப்பிற்கு வரும் அவரது ரசிகர்களுடன் கூட நின்று போட்டோ எடுத்துக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

பொதுவாக ரசிகர்கள் தங்களை காண வரும்பொழுது அவர் பாடப்பிடிப்பில் இருந்தால் படப்பிடிப்பு முடியும் வரை அவர்களை காத்திருக்க சொல்வார். ஒருவேளை படப்பிடிப்பில் புதிதாக ஏதாவது ஒரு தோற்றத்தில் நடித்துக் கொண்டிருந்தால் மேக்கப்பை கலைத்து விட்டுதான் போட்டோவிற்கு போஸ் கொடுப்பார் அஜித்.

ஆனால் படப்பிடிப்பு தளத்திலேயே பணிபுரிபவர்கள் அஜித்துடன் போட்டோ எடுக்க நினைக்கும் போது அப்படியே எந்த வேடத்தில் இருக்கிறாரோ அந்த வேடத்திலேயே அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்வார். அந்த வகையில் விடாமுயற்சி படபிடிப்பில் படத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் அஜித்துடன் போட்டோ எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டுள்ளார்.

இதனை அறிந்த அஜித் அவர் போட்டிருந்த வேடத்தோடையே அந்த ரசிகருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார். இதனை அந்த ரசிகர் சமூக வலைதளங்களில் பதிவிட அது பிறகு வைரலாகி உள்ளது. இந்த புகைப்படம் வைரலானது அடுத்து அந்த ஊழியரை அழைத்து விசாரித்து இருக்கின்றனர் பட குழுவினர்.

ஆனால் அஜித் அவரை விசாரிக்க வேண்டாம் என்று கூறிவிட்டார் இந்த விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இருந்தும் படப்பிடிப்பில் இருந்து அந்த ஊழியரை நீக்கி உள்ளனர் பட குழுவினர் இதனை அடுத்து இது ஒரு அநியாயமான விஷயம் என்று மக்கள் மத்தியில் பேச்சுக்கள் போய்க் கொண்டுள்ளன.

To Top