Connect with us

கமல் அடுத்த படமும் சண்டைதானாம்… நாயகன் 2 வா இருக்குமா?

kamal 234

News

கமல் அடுத்த படமும் சண்டைதானாம்… நாயகன் 2 வா இருக்குமா?

Social Media Bar

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் அடுத்து என்ன படத்தில் நடிக்க போகிறார் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்து வந்தது. ஏனெனில் அவர் ஹெச்.வினோத், வெற்றிமாறன், பா.ரஞ்சித் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் என பலரிடமும் கதை கேட்டு வந்தார்.

எனவே யார் படத்தில் இவர் நடிக்கப் போகிறார் என்கிற கேள்வி எழுந்து வந்தது. மேலும் அப்பொழுது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இந்தியன் 2 வின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்ததாக மணிரத்தினம் இயக்கும் திரைப்படத்தில் தான் கமல்ஹாசன் இயக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ளது என்றும் கூறப்படுகிறது ஆனால் படத்தின் டீசரே மிகுந்த ஆக்சன் காட்சிகள் நிறைந்ததாக உள்ளது எனவே படமே ஆக்‌ஷன் படமாக தான் இருக்கப் போகிறது என்று கூறப்படுகிறது.

இதனை அடுத்து இந்த திரைப்படம் விக்ரம் திரைப்படம் போலத்தான் இருக்குமா என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. மேலும் சண்டை அதிகம் இருப்பதால் ஒரு வேலை நாயகன் படத்தின் அடுத்த பாகமாக கூட இந்த படம் இருக்கலாம் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

To Top