Cinema History
சரக்குதான் காரணம்.. கண்ணதாசனுக்கும் காமராஜருக்கும் நடந்த சண்டை… ரொம்ப தில்லான ஆளுதான் போல!..
தமிழ்நாட்டில் உள்ள சினிமா கவிஞர்களில் மிகவும் புகழ்ப்பெற்றவர் கவிஞர் கண்ணதாசன். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் வாங்கும் அளவு சம்பளம் வாங்கிய ஒரு கவிஞர் கண்ணதாசன் மட்டுமே. கண்ணதாசன் அனைவரிடமும் அன்பாக பழக கூடியவர். அதே சமயம் சட்டென கோபமாகிவிடுவார்.
அரசியல் மீது அதிக ஆர்வம் கொண்ட கண்ணதாசன் அப்போது காங்கிரஸ் கட்சியில் முக்கியமானவராக இருந்தார். அந்த சமயத்தில் தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவராக கக்கன் இருந்தார். அப்போதுதான் காங்கிரஸ் இந்தியா முழுவதும் தீவிர மதுவிலக்கை அமல்ப்படுத்தியது. ஆனால் உரிமம் பெற்றவர்கள் மட்டும் மது வாங்கிக்கொள்ளலாம் என விலக்கு இருந்தது.
இந்த நிலையில் கக்கனை சந்தித்து அவரிடம் உரிமம் பெற்றுகொண்டார் கண்ணதாசன். இதனால் காங்கிரஸ் கட்சி அதிருப்தி அடைந்தது. கட்சி உறுப்பினரே விலக்கு வாங்கி கொண்டு மது அருந்துகிறாரே என யோசித்த காங்கிரஸ், இந்த விஷயத்தை காம்ராஜரிடம் கொண்டு சென்றது.
விஷயத்தை அறிந்த காமராஜர், கண்ணதாசனிடம் அந்த உரிமத்தை திரும்ப கொடுக்குமாறு கூறினார். அதற்கு கண்ணதாசன் “உரிமத்தை எல்லாம் திரும்ப தர முடியாது. வேண்டுமானால் கட்சி உறுப்பினர் அட்டையை தருகிறேன் என்னையை கட்சியை விட்டு நீக்கிவிடுங்கள் என கூறியுள்ளார்”. இதனை கேட்ட காமராஜர் பிறகு கண்ணதாசனிடம் எதுவும் பேசாமல் சென்றுவிட்டாராம்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்