Connect with us

இயக்குனரோடு இருந்த பிரச்சனையை சரி செய்ய கில்லி.. மறுவெளியீட்டை வைத்து மூன்று படத்துக்கு துண்டை போட்ட தயாரிப்பாளர்!.

vijay

News

இயக்குனரோடு இருந்த பிரச்சனையை சரி செய்ய கில்லி.. மறுவெளியீட்டை வைத்து மூன்று படத்துக்கு துண்டை போட்ட தயாரிப்பாளர்!.

Social Media Bar

மறுவெளியீட்டு படத்திற்கு இவ்வளவு மவுசா என அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் திரையில் நல்ல வெற்றியை பெற்று வருகிறது விஜய் நடித்த கில்லி திரைப்படம். கில்லி திரைப்படத்தை இயக்குனர் தரணி இயக்கியிருந்தார்.

அப்போதைய காலக்கட்டத்தில் தரணி இயக்கிய படங்கள் பலவும் நல்ல வெற்றியை கொடுத்துள்ளன. அவர் இயக்கும் திரைப்படங்களில் கதாநாயகனுக்கு மாஸ் காட்சிகள் இருக்கும் அதே அளவிற்கு குடும்பங்கள் ரசிக்கும் வகையிலான காட்சிகளும் இருப்பதை பார்க்க முடியும்.

ghilli
ghilli

அந்த வகையில் கில்லி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் கில்லி திரைப்படத்தின் இயக்குனர் தரணிக்கும் நடிகர் விஜய்க்கும் அவ்வளவாக தொடர்பில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த இருபது வருடங்களில் விஜய்யை வைத்து படம் இயக்குவதற்காக பலமுறை அவரை சந்திக்க நினைத்துள்ளார் தரணி.

ஆனால் விஜய் அவரது சந்திப்பை தட்டி கழித்து வந்தார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்சமயம் கில்லி மறுவெளியீட்டிற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து தரணியை நேரில் சந்தித்து மரியாதை செய்துள்ளார் விஜய். இதற்கு நடுவே இந்த படத்தின் தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம் அடுத்து தன் கை வசமுள்ள குஷி, இந்தியன் ஆகிய திரைப்படங்களையும் மறுவெளியீடு செய்ய ப்ளான் செய்துள்ளாராம்.

To Top