பேரு வச்சதுமே போனி பண்ணியாச்சு!.. விஜய் கடுப்பானாரு.. ஆனா அஜித் கண்டுக்கவே இல்லை!.. அஜித்தின் அடுத்த படத்தில் நடந்த சம்பவம்!.

திரைப்படங்களை தயாரிப்பதை காட்டிலும் அவற்றை விற்பனை செய்வது என்பதுதான் தற்சமயம் முக்கியமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. சில நேரங்களில் பெரும் ஹீரோக்களின் படங்களுக்கே இந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன. லால் சலாம் திரைப்படம் தற்சமயம் அப்படியான பிரச்சனைகளைதான் சந்தித்து வருகிறது.

லால் சலாம் திரைப்படத்தை ஓ.டி.டியில் விற்பனை செய்வதில் சிக்கல் ஏறப்ட்டுள்ளது. அதனால்தான் இன்னமும் எந்த ஓ.டி.டியிலும் லால் சலாம் வெளியாகவில்லை. இந்த நிலையில்தான் அவசரப்பட்டு விஜய்யின் கோபத்திற்கு ஆளானார் தயாரிப்பாளர் ஒருவர்.

விஜய்யின் 69 ஆவது திரைப்படத்தை தயாரிப்பதாக ஒப்புக்கொண்ட அவர் அதற்குள்ளாகவே அவற்றி உரிமைகளை விற்க துவங்கிவிட்டார். இத்தனைக்கும் இன்னமும் படப்பிடிப்பே துவங்கப்படவில்லை. இதனால் கடுப்பான விஜய் அந்த நிறுவனத்தோடு ஒப்பந்தத்தை நிராகரித்து விட்டாராம்.

ajith good bad ugly
ajith good bad ugly
Social Media Bar

இப்போது அதே விஷயத்தை மைதிலி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் செய்துள்ளது. தற்சமயம் அஜித்தை வைத்து குட் பேட் அக்லி என்கிற திரைப்படத்தை இந்த நிறுவனம்தான் தயாரிக்க இருக்கிறது. இந்த நிறுவனம் படத்தின் வெளிநாட்டு உரிமத்தை நல்ல விலைக்கு விற்றுள்ளது. இந்த நிலையில் அஜித் படத்தின் படப்பிடிப்பு இன்னமும் துவங்கவே இல்லை.

அதற்க்குள்ளாகவே தயாரிப்பு நிறுவனம் இந்த வேலையை பார்த்துள்ளது. ஆனால் அஜித்தை பொறுத்தவரை படத்தின் வியாபார விஷயங்களில் தலையிடுவதில்லை என்பதால் அந்த விஷயத்தை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டாராம்.