News
லியோ இரண்டாம் பாகத்துக்கு பிறகுதான் விக்ரம் அடுத்த பார்ட் வரும்… இன்னும் பல வருஷம் ஆகும் போலயே!..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான லியோ திரைப்படம் பெரும் அலையை ஏற்படுத்தியது. முதல் வாரத்திலேயே கிட்டத்தட்ட 450 கோடிக்கு ஓடி தமிழில் முதல் வாரத்தில் அதிகமாக ஓடிய இரண்டாவது திரைப்படமாக லியோ திரைப்படம் இருக்கிறது.
முதல் இடத்தில் ரஜினி நடித்த 2.0 திரைப்படம் இருக்கிறது. இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விக்ரம் கமல் லியோவிற்கு ஃபோன் செய்து பேசுவது போன்ற காட்சி வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து லோகேஷிடம் பேட்டியில் கேட்கும் பொழுது கைதி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட இருக்கிறது.
அதற்குப் பிறகு ரோலக்ஸ் திரைப்படம் எடுக்கப்பட வேண்டும். அதற்கு பிறகுதான் விக்ரம் படத்தின் அடுத்த பாகம் வரும் என்று கூறினார் அப்பொழுது நிருபர் லியோ படத்தின் இரண்டாவது பாகமும் வர இருப்பதாக கூறப்படுகிறது என கேட்கும் பொழுது அது சர்ப்ரைஸ் ஆக இருக்கட்டும் சார் என்று கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

பொதுவாக லோகேஷ் கனகராஜ் ஒரு விஷயம் சர்ப்ரைஸ் ஆக இருக்கட்டும் என்று கூறினார் என்றால் அது நிச்சயமாக நடக்க இருக்கிறது என்றுதான் அர்த்தம். ஏனெனில் லியோ படம் எல்.சி.யு வில் வருகிறதா என்று கேட்டப்போதும், அது ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் படத்தின் தழுவலா என கேட்டப்போது அது சர்ப்ரைஸ் என்றே கூறினார் லோகேஷ்.
அதேபோலவே அவை இரண்டுமே உண்மையாகின. அந்த வகையில் லியோ படத்தின் இரண்டாம் பாகம் இருப்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவர் கைதி படத்தின் இரண்டாம் பாகம் ரோலக்ஸ், லியோ 2 என்று மூன்று படங்களை முடித்த பிறகுதான் விக்ரம் படத்தின் அடுத்த பாகம் வரும் என்பதால் அதற்கு இன்னும் காலங்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
