Connect with us

பாட்ஷா மாதிரி அவருக்கு ஒரு கதை வச்சிருந்தேன்!.. பாட்ஷா இயக்குனரிடம் வாய்ப்பை தவறவிட்ட விஜய்!..

vijay basha

Cinema History

பாட்ஷா மாதிரி அவருக்கு ஒரு கதை வச்சிருந்தேன்!.. பாட்ஷா இயக்குனரிடம் வாய்ப்பை தவறவிட்ட விஜய்!..

Social Media Bar

ஒவ்வொரு நடிகரும் எக்கச்சக்கமான திரைப்படங்கள் நடித்திருந்தாலும் கூட அவர்களுக்கு அடையாளமாக அமைவது ஒரு சில படங்கள்தான். உதாரணத்திற்கு கமல்ஹாசன் பல படங்கள் நடித்திருந்த போதும் அவருக்கு நாயகன், ஆளவந்தான் மாதிரியான திரைப்படங்கள் முக்கியமானதாக அமைகின்றன.

அதே போல ரஜினிக்கு முக்கியமான படமாக அமைந்த திரைப்படம் பாட்ஷா. இப்போது வரை ரஜினிகாந்தின் அடையாளமாக மாறியிருக்கும் முக்கியமான திரைப்படம் பாட்ஷா. அந்த படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஒரு பேட்டியில் கூறும்போது என்னால் கூட பாட்ஷா படத்தை போன்ற இன்னொரு படத்தை எடுக்க முடியுமா என தெரியவில்லை என கூறியுள்ளார்.

அந்த அளவிற்கு சிறப்பான படமாக பாட்ஷா அமைந்தது. அதற்கு பிறகு விஜய்க்கும் கூட அப்படியான ஒரு கதையை எழுதியுள்ளார் சுரேஷ் கிருஷ்ணா. படக்கதைப்படி ஊர் உலகமே தேடும் ஒரு முக்கியமான கேங்ஸ்டர்தான் விஜய். அவர் ஒரு லாரி ஓட்டுநராக இருக்கிறார். ஆனால் அவரை யாருமே பார்த்ததே இல்லை என்கிற மாதிரியான கதை.

அதை விஜய்யிடம் கூறியப்போது விஜய் அப்போதுதான் 30 வயதை அடைந்திருந்தார். எனவே அவரது வயதுக்கு இப்படியான கதாபாத்திரத்தில் நடிக்க முடியுமா என்ற குழப்பம் இருந்ததால் அந்த படத்தை நிராகரித்துவிட்டார்.

இதுக்குறித்து சுரேஷ் கிருஷ்ணா கூறும்போது நான் மூன்று நான்கு முறை விஜய்யிடம் பேசினேன். ஆனால் அவர் வாய்ப்பை தவறவிட்டு விட்டார் என கூறியுள்ளார் சுரேஷ் கிருஷ்ணா.

To Top