Cinema History
எங்க கோத்து விட பாக்குற.. எஸ்.ஜே சூர்யாவிடம் இருந்து நேக்காக எஸ்கேப் ஆன ஏ.ஆர் ரகுமான்..!
1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். அதுவரை தமிழ் சினிமாவில் எம்.எஸ் வி, இளையராஜா போன்ற இசையமைப்பாளர்கள் பெரும் உச்சத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் இருவரில் இருந்து முழுதாக வேறுப்பட்ட மாடர்ன் இசையை எடுத்துக்கொண்டு வந்தார் ஏ.ஆர் ரகுமான். எனவே சினிமாவிற்கு வந்த உடனேயே அவர் அதிகமான வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து இளையராஜாவிற்கு போட்டியாக ஒரு இசையமைப்பாளர் உருவாகிவிட்டார் என திரையுலகமே பேச துவங்கியது.
இதனால் இளையராஜாவிற்கும் ஏ.ஆர் ரகுமானுக்கும் இடையே போட்டி உண்டானதாக பேச்சுக்கள் உண்டு. மணிரத்னம் இளையராஜாவை அவமதித்ததாலேயே அவர் ஏ.ஆர் ரகுமானை இசையமைப்பாளர் ஆக்கினார் என பேச்சுக்கள் இருந்தன.
இந்த நிலையில் இந்த கதையையே அடிப்படையாக கொண்டு எஸ்.ஜே சூர்யா இயக்கிய திரைப்படம்தான் இசை. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமானே இசையமைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார் எஸ்.ஜே சூர்யா. ஆனால் ஏ.ஆர் ரகுமான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்த படத்திற்கு ஏன் நீங்களே இசையமைக்க கூடாது என எஸ்.ஜே சூர்யாவை உசுப்பிவிட்டுள்ளார் ஏ.ஆர் ரகுமான்.
அதன் முடிவாய் இறுதியில் அந்த படத்திற்கு எஸ்.ஜே சூர்யாதான் இசையமைத்தார். இதுக்குறித்து பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறும்போது அவர் கதையையே படமாக எடுத்துவிட்டு அவரையே இசையமைக்க அழைத்தால் எப்படி வருவார் என நகைச்சுவையாக கேட்டுள்ளார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்