Connect with us

உங்கள கேட்க ஆள் இல்லாமல்தான் இப்படி பண்றீங்க!.. நெட்டிசன்களை நேரடியாக தாக்கிய த்ரிஷா!..

trisha krishnan

News

உங்கள கேட்க ஆள் இல்லாமல்தான் இப்படி பண்றீங்க!.. நெட்டிசன்களை நேரடியாக தாக்கிய த்ரிஷா!..

Social Media Bar

Trisha: கோலிவுட்டில் உள்ள சினிமா நடிகைகளிலேயே சற்று வீரமான நடிகை என்றால் த்ரிஷாவை கூறலாம். த்ரிஷா தன்னுடைய 16 வயதியிலேயே தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர். தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் என பிரபலமான அனைத்து நடிகர்களுடனும் சேர்ந்து நடித்திருக்கிறார் த்ரிஷா.

பொதுவாகவே நடிகைகள் இளமை குறைய குறைய சினிமாவில் அவர்களுக்கான வாய்ப்பு என்பது குறைய துவங்கிவிடும். அதே போலத்தான் த்ரிஷாவிற்கும் வாய்ப்புகள் குறைய துவங்கின. ஆனாலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் த்ரிஷாவிற்கு சினிமாவில் ஒரு ரீ எண்ட்ரியாக அமைந்தது.

trisha
trisha

அதற்கு முன்பு த்ரிஷாவை 90ஸ் கிட்ஸ் எப்படி அழகாக பார்த்தார்களோ அதே அழகில் அவரை கண்முன் நிறுத்தினார் இயக்குனர் மணிரத்தினம். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் த்ரிஷாவிற்கு வாய்ப்புகள் வர துவங்கின.

த்ரிஷாவின் பதிவு:

அதனை தொடர்ந்து லியோ திரைப்படத்தில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். மேலும் விடாமுயற்சி திரைப்படத்திலும் அஜித்திற்கு ஜோடியாக நடித்து வருகிறார் த்ரிஷா. சீக்கிரத்தில் நயன் தாராவின் இடத்தை த்ரிஷா பிடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அடிக்கடி த்ரிஷா குறித்து ஏதாவது பிரச்சனை என்பது வந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஏற்கனவே மன்சூர் அலிக்கானில் துவங்கி பலரும் த்ரிஷா குறித்து சர்ச்சையை கிளப்பினர்.

ஒவ்வொரு முறை சர்ச்சை கிளம்பும்போதும் அதற்கு எதிராக தனது பதிலை ஆணித்தரமாக முன் வைத்து வந்தார் த்ரிஷா. இந்த நிலையில் த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று ஒரு ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அதில் அவர் கூறும்போது சமூக ஊடகங்களில் இருக்கும் பலரும் அவமரியாதை செய்வதையே வேலையாக கொண்டுள்ளனர்.

யாரும் அவர்களை அதற்காக எதுவும் செய்ய முடியாது என்கிற தைரியத்தில் இதை செய்கின்றனர் என நேரடியாகவே பதிவிட்டுள்ளார்.

To Top