Connect with us

ஒரு படத்துக்கு ரெண்டு கிளைமேக்ஸ்.. அதனாலதான் இந்தப்படம் செம ஹிட்டா!…

Cinema History

ஒரு படத்துக்கு ரெண்டு கிளைமேக்ஸ்.. அதனாலதான் இந்தப்படம் செம ஹிட்டா!…

Social Media Bar

Cheran and Parthiban: நடிகர் பார்த்தீபன் மிகவும் வித்தியாசமான கதைகளை வைத்து படம் இயக்கூடிய திறமை வாய்ந்த இயக்குனம் மற்றும் நடிகர். இவரைப்போலவே இயக்குனர் சேரன் வித்தியாசமான கதைகளை இயக்குவதில் வல்லவர்.

இவருடைய முதல் படம்தான் பாரதி கண்ணம்மா. இந்தபடம் 1997 இல் வெளியாக நல்ல வரவேற்பைப் பெற்ற படம். இந்த படத்தில் மீனா நடிகையாக நடித்திருந்தார்.

இந்த படத்தின் கிளைமேக்ஸ் வரை அமைதியாக இருந்த பார்த்திபன் அதன்பிறகு கிளைமேக்ஸ் நீங்கள் சொல்வது போல் வேண்டாம் இது மக்களுக்குப் பிடிக்காது என்று அதனால் நான் சொல்வதை போல் ஒரு கிளைமேக்ஸ் வையுங்கள் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் இயக்குனர் சேரன் முடியாது நான் சொல்வதை தான் படமாக்க வேண்டும் இதுதான் மக்களுக்குப் பிடிக்கும் என்று உறுதியாக் நின்றுள்ளார்.

இந்த பிரச்சனை பார்த்திபன் மனைவி சீதா வரை எடுத்துச் சென்றுள்ளது படக்குழு. சீதா பார்த்திபனிடம் பேசி சமாதானம் செய்ய இறுதியில் இரண்டு கிளைமேக்ஸ் எடுக்கப்பட்டது.

அந்த இரண்டு கிளைமேக்ஸும் இயக்குனர் வசந்த், இயக்குனர் P வாசு, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோருக்கு போட்டு காண்பிக்கப்பட்டது.

இறுதியில் அந்த மூன்று இயக்குனர்களும் சேரன் எடுத்த கிளைமேக்ஸ் தான் நன்றாக உள்ளது என்று அதையே உறுதிசெய்துள்ளனர்.

பின்பு அந்த படம் நல்ல ஹிட் கொடுத்தது. இது பற்றி பார்த்தீபன் பல மேடைகளில் இந்த படம் வெற்றி பெற சேரன் தான் காரணம் என்று பாராட்டியிந்தார்.சேரன் அவர் இயக்கிய முதல் படத்திலே பெரிய வெற்றியை தேடித்தந்தது.

To Top