பொது மக்கள் குறித்து இவ்வளவு மோசமாவா நினைக்கிறீங்க… கழுவி ஊத்திய உதயநிதி..! இப்படி பேசியிருக்க வேண்டாம்…
தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு முறையும் மக்கள் பார்க்கும் ரசனை என்பது மாறிக்கொண்டே இருக்கும். ஒரு காலகட்டத்தில் கருப்பு வெள்ளை சினிமாக்களில் கத்தியை கொண்டு சண்டையிடுவதை பார்த்து ரசித்து வந்த ரசிகர்கள் இப்பொழுது துப்பாக்கியை வைத்து சுடுவதை அதிகமாக ரசிப்பதை பார்க்க முடிகிறது.
முன்பெல்லாம் குடும்ப திரைப்படங்கள் இருந்தால் சண்டை காட்சிகள் இல்லாமல் இருக்கும். இப்பொழுது எல்லாம் ரத்த காட்சிகள் கொண்ட திரைப்படங்களைக் கூட குடும்பமாக பார்க்கும் அளவிற்கு ரசனைகள் மாறி இருக்கின்றன.
ஆனால் தமிழ் மக்கள் ரசனை இது தான் என்று யாராலும் கூற முடியாது பல அனுபவம் வாய்ந்த நடிகர்களாகவே தொடர்ந்து வெற்றி படங்களை கொடுக்க முடியாததற்கு அதுதான் காரணமாக இருக்கிறது.

கேலி செய்த உதயநிதி:
இந்த நிலையில் தமிழ் மக்களின் பார்வையை கேலி செய்யும் வகையில் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது அதிக வைரலாகி வருகிறது இயக்குனர் எழில் இயக்கத்தில் உதயநிதி நடித்த படம் சரவணன் இருக்க பயமேன.
இந்த திரைப்படம் குறித்து அவர் ஒரு பேட்டியில் பேசும்பொழுது பிரிவியூ ஷோ நடத்திய பொழுது எனது தங்கை அந்த படத்தில் இருந்து பார்க்காமல் கிளம்பி சென்று விட்டாள். நான் அவளிடம் ஃபோன் பண்ணி கேட்ட பொழுது இதெல்லாம் ஒரு படம் என்று இதை பார்க்க வேண்டும் என்னை அழைத்தாயா? என்று கூறினாள்.
அவ்வளவு மோசமாக அந்த படம் இருந்தாலும் கூட திரையரங்குகளில் வெளியான பிறகு நல்ல வெற்றியை கொடுத்தது. அப்பொழுதுதான் தமிழ் மக்களின் டேஸ்ட் எப்படிப்பட்டது என்று நான் தெரிந்து கொண்டேன் என்று கேலி செய்து பேசியிருந்தார் உதயநிதி.