Hollywood Cinema news
டிஸ்னியின் குழந்தைகளுக்கான அடுத்த திரைப்படங்கள் ! – 90ஸ் கிட்ஸை கிளப்பிவிட்ட டிஸ்னி!
உலக அளவில் குழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படங்களை தயாரிக்கும் நிறுவனங்களில் முக்கியமான நிறுவனம் வால்ட் டிஸ்னி. ஒரு வருடத்திற்கு குறைந்தது 10 திரைப்படங்களாவது இயக்கி வெளியிடும் வால்ட் டிஸ்னி.
இந்த நிலையில் 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த டாய் ஸ்டோரி என்கிற திரைப்படத்தின் ஐந்தாவது பாகத்தை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளது வால்ட் டிஸ்னி. உட்டி என்கிற பொம்மை மையமாக வைத்து இந்த கதையில் இந்த முறை அதன் உரிமையாளரான ஆண்டியின் பால்ய காலத்தில் இந்த பொம்மைகளின் சாகசங்களை காட்டும் விதமாக திரைப்படம் அமைய இருக்கிறது.
அதே போலவே ஏற்கனவே வெளிவந்த ஃப்ரோசன் திரைப்படத்தின் 3 ஆவது பாகமும் எடுக்கப்பட இருக்கிறது. கையில் இருந்து ஐஸ் விடும் சக்தியை கொண்ட பெண் மற்றும் அவளது தங்கையை மையமாக வைத்து செல்லும் இந்த படத்தின் மூன்றாம் பாகம் வரவிருக்கிறது. இதன் முதல் பாகம் ஆஸ்கார் விருதை பெற்றது.
அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட திரைப்படமான சூட்டோபியாவும் ஆஸ்கர் விருதை பெற்ற திரைப்படமாகும். விலங்குகள் மட்டும் வாழும் ஒரு உலகில் நடக்கும் கதையை அடிப்படையாக கொண்டு இந்த கதை செல்கிறது. இதன் இரண்டாம் பாகத்தையும் இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளது வால்ட் டிஸ்னி.
இந்த படங்களை ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடலாம் என வால்ட் டிஸ்னி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே இந்த வருட இறுதிக்குள் இந்த படங்களை நாம் எதிர்பார்க்கலாம்.