Latest News
என் பையன் வாழ்க்கையே போயிடுச்சு!.. வடிவேலுவால் மோசம் போன பிரபலம்..
தமிழ் சினிமாவில் உள்ள காமெடி நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகும் பொழுது அவருக்கு போட்டி என்பது அதிகமாகவே இருந்தது.
இப்பொழுது இருப்பதை விடவும் காமெடி நடிகர்கள் அந்த காலகட்டங்களில் அதிகமாக இருந்தனர். முக்கியமாக கவுண்டமணி செந்தில் இருவரும் பிரபலமாக இருந்த காலகட்டமாக வடிவேலு என்ட்ரி ஆன காலகட்டம் இருந்தது.
இருந்தாலும் கூட தனது தனிப்பட்ட நடிப்பின் மூலமாக வடிவேலு தனக்கென தனி இடத்தை பிடித்தார் வடிவேலு. வடிவேலு தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு ராஜ்கிரண் காரணமாக இருந்தார். அதேபோல தொடர்ந்து வடிவேலு பெரும் உச்சத்தை தொடுவதற்கு காரணமாக இருந்தவர் இயக்குனர் வி சேகர்.
வடிவேலுவிற்கு வந்த வாய்ப்பு:
காலம் மாறிப்போச்சு, பொங்கலோ பொங்கல் மாதிரியான திரைப்படங்களை இயக்கியவர் வி சேகர். தொடர்ந்து அவரது திரைப்படங்களில் வடிவேலுவிற்கு சான்ஸ் கொடுத்து வந்தார். முக்கியமாக கவுண்டமணியும் செந்திலும் நடித்திருக்கும் திரைப்படங்களில் கூட அவர் வடிவேலுக்கு வாய்ப்பு கொடுத்து இருப்பார்.
அந்த திரைப்படங்களில் கவுண்டமணி செந்தில் நகைச்சுவைகளை தாண்டி வடிவேலு நகைச்சுவை செய்து அவருக்கான இடத்தை பிடித்திருப்பார் . வி சேகர் திரைப்படத்தில் நடித்த பிறகுதான் முதன்முதலாக வடிவேலு கார் வாங்கினார் என்று வி சேகரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
அப்படியெல்லாம் உதவி செய்த வி.சேகருக்கு வடிவேலு உதவி செய்யாமல் விட்டதை வி சேகர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். வி சேகர் தன்னுடைய மகனை கதாநாயகனாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கு முயற்சி செய்திருந்தார்.
இயக்குனருக்கு ஏமாற்றம்:
அந்த திரைப்படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார் வி சேகர் வடிவேலுவும் அதற்கு ஒப்புக்கொண்டு இருக்கிறார். என்னை உயர்த்திவிட்ட இயக்குனர் நீங்கள் உங்கள் மகனை நான் உயர்த்தி விட மாட்டேனா? என்றெல்லாம் கூறியிருக்கிறார் வடிவேலு.
ஆனால் அதற்குப் பிறகு அவர் அரசியலுக்கு வந்து விஜயகாந்தை அதிகமாக விமர்சித்ததன் காரணமாக திரும்ப சினிமாவில் நடிக்க முடியாமல் போகும் சூழ்நிலை உருவானது.
இந்த நிலையில் திரும்ப மதுரைக்கு சென்று விட்டார் வடிவேலு. அப்பொழுது வடிவேலுவை திரும்ப நடிப்பதற்கு வர சொல்லி கேட்டிருந்தார் வி.சேகர் ஆனால் வடிவேலு அதற்கு மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து அந்த திரைப்படத்தை கருணாசை வைத்து இயக்கினார் வி சேகர்.
ஆனால் அந்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது. அதனை தொடர்ந்து தன்னுடைய மகனுக்கும் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் போனது என்று மனம் வருந்தி கூறுகிறார் வி சேகர்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்