Cinema History
என்ன நடிக்க விடாம பண்ணுனாரு!.. காதல் பட நடிகருக்கு வடிவேலு போட்ட ஸ்கெட்ச்..
தமிழில் ஒரு நகைச்சுவை நடிகர் என்பதையும் தாண்டி ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக பல கதாபாத்திரங்களை எடுத்து சிறப்பாக நடிக்க கூடியவர் நடிகர் வடிவேலு.
அப்படி வடிவேலு நடிக்கும் படங்களில் பல படங்கள் பிரபலமானவையாக இருக்கும். சில படங்களை வடிவேலுவின் காமெடிக்காகவே மக்கள் திரும்ப திரும்ப பார்ப்பதும் உண்டு. அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் வடிவேலுவின் காமெடி வரவேற்பை பெற்றவை.
ஆனால் வடிவேலுவிற்கு ஒரு பழக்கம் உண்டு. வடிவேலு திரைப்படங்களில் தொடர்ந்து அவரது கூட்டணியில் இருக்கும் நடிகர்களைதான் நடிக்க வைப்பாராம். பெரும்பாலான வடிவேலு காமெடிகளில் இந்த நடிகர்களை நாம் பார்க்க முடியும்.
இந்த நிலையில் சுராஜ் இயக்கிய மருதமலை திரைப்படத்தில் வடிவேலுவிற்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த திரைப்படத்தில் காதல் திரைப்படத்தில் நடித்த நடிகர் சரவணன் வாய்ப்பு கேட்டிருந்தார் ஆனால் வடிவேலு அவரது கூட்டணியில் உள்ள நடிகர்களை தவிர வேறு யாரும் அதில் நடிக்க கூடாது என்று ஸ்ட்ரிக்ட்டாக கூறிவிட்டாராம்.

ஆனால் சுராஜ்க்கு சரவணனை நடிக்க வைக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. எனவே தண்டவாளத்தில் அடிபட்டு கிடக்கும் ஒரு பிணம் பேயாக வருவது போன்ற காட்சி ஒன்று அந்த படத்தில் உண்டு. அந்த காட்சிக்கு மட்டும் சரவணனை நடிக்க வைக்க ஏற்பாடு செய்தார் சுராஜ்.
வடிவேலு வருவதற்கு முன்பே சரவணனுக்கான காட்சிகளை எடுத்து முடித்து விட்டாராம் சுராஜ். அதற்குப் பிறகு பார்த்தால் வடிவேலு கையோடு ஒரு ஆளை அழைத்துக்கொண்டு வந்தாராம். இவர் அந்த ரயில் காட்சியில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார் வடிவேலு. ஆனால் அந்த காட்சி ஏற்கனவே படம் ஆக்கப்பட்டுள்ளது என சுராஜ் அவரிடம் தெரிவித்திருக்கிறார்.
இப்படி வடிவேலு அவர் நடிக்கும் படங்களில் அவருடன் யார் நடிக்க வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்வாராம்.
