தமிழ் திரையுலகில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் வடிவேலு. இப்போதைய காலக்கட்டத்தில் எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் வடிவேலுவின் முகத்தை பார்க்காமல் கடந்து விட முடியாது.
அந்த அளவிற்கு அவரது மீம்கள் இங்கே பிரபலமடைந்துள்ளன. தற்சமயம் வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் வெளியானது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெறவில்லை. ஒரு சில படங்களில் தற்சமயம் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்சமயம் வடிவேலு சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். சந்திரமுகி 2 படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்தபோது நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பும் நடந்து வந்தது.
அப்போது சந்திரமுகி 2 படத்தில் முக்கியமான காட்சி ஒன்று எடுக்கப்பட்டு கொண்டிருந்தது. ஆனால் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் காட்சிக்கு நடித்துக்கொடுக்க வேண்டி இருந்ததால் பாதியிலேயே படப்பிடிப்பில் இருந்து கிளம்ப இருந்தார் வடிவேலு. ஆனால் வடிவேலுவின் காட்சிகள் முழுமையாக எடுக்கப்படாமல் இருந்ததால் பி.வாசு அவரிடம் போகா வேண்டாமென்று கேட்டுக்கொண்டார்.
ஆனால் வடிவேலு அவர் பேச்சை கேட்பதாக இல்லை. இதை கேட்ட வாசு கோபத்தில் போறதுன்னா போ என முகத்தை கூட பார்க்காமல் கையை மட்டும் அசைத்துவிட்டு சென்றுவிட்டார். இதை பல இடங்களில் புலம்பி வருகிறாராம் வடிவேலு.