Connect with us

அருண் விஜய்க்கு ஒரு மகாராஜாவா?.. வணங்கான் படத்தின் கதை இதுவா?

arun-vijay

News

அருண் விஜய்க்கு ஒரு மகாராஜாவா?.. வணங்கான் படத்தின் கதை இதுவா?

Social Media Bar

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் வணங்கான். ஆரம்பத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துதான் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

ஆனால் படப்பிடிப்பு போக போக பாலாவுக்கும் சூர்யாவிற்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் முழுதாக படமாக்குவது கடினம் என்பதை அறிந்த சூர்யா பாதியிலேயே படத்தை விட்டு விலகி விட்டார்.

மேலும் அப்பொழுது அந்த திரைப்படத்தை சூர்யாதான் தயாரித்தும் வந்தார். இந்த நிலையில் வணங்கான் திரைப்படத்தில் அடுத்து அருண் விஜயை நடிக்க வைத்தார் பாலா.

சூர்யாவுடன் பிரச்சனை:

தற்சமயம் வணங்கான் திரைப்படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த ட்ரெய்லருக்கு அதிக வரவேற்புகள் கிடைத்திருக்கின்றன இப்படி ஒரு கதையை சூர்யா தவற விட்டுவிட்டாரே என்று இது குறித்து ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

ட்ரைலரை வைத்து படத்தின் கதையை பார்க்கும் பொழுது பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் கதாபாத்திரமாகதான் அருண் விஜயின் கதாபாத்திரம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் கதை:

அவரைச் சுற்றி இருக்கும் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு காரணமானவர்களை அவரே பழிவாங்குவதாக கதை இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக ஜெயிலுக்கு செல்கிறார் அருண் விஜய்.

ஆனால்  அவர் செய்த எதுவும் தவறாக தெரியாத காரணத்தினால் மக்கள் அவருக்கு ஆதரவாக இருப்பதாக காட்சிகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் ட்ரைலரில் அதற்கு தகுந்தார் போன்ற காட்சிகள் தான் இருக்கின்றன.

படத்தில் நீதிபதியாக நடிகரும் இயக்குனருமான மிஷ்கின் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதிக்கு எப்படி மகாராஜா திரைப்படம் ஒரு முக்கியமான திரைப்படமாக இருந்ததோ அதேபோன்ற கதைகளத்தை வணங்கான் திரைப்படமும் கொண்டிருப்பதால் இது அருண் விஜய்க்கும் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

To Top