Tamil Cinema News
இவளை மொத வெளியே அனுப்புங்க.. வாணி போஜனை அவமானப்படுத்திய நபர்.. அட கொடுமையே.!
சின்னத்திரை மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமானவர்களில் முக்கியமானவர் நடிகை வாணி போஜன். சன் டிவியில் ஒளிப்பரப்பான தெய்வமகள் சீரியல்தான் அவரை அதிக பிரபலப்படுத்தியது. அதற்கு முன்பும் நிறைய சீரியல்களில் நடித்துள்ளார் வாணி போஜன்.
ஆனால் தெய்வமகள் சீரியல்தான் அவருக்கு முக்கிய சீரியலாக அமைந்தது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஓ மை கடவுளே திரைப்படம் இவருக்கு முக்கிய படமாக அமைந்தது. இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்திருந்தார்.
வாணி போஜனுக்கும் இதில் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு வாணி போஜன் நிறைய வேலைகளை செய்திருக்கிறார்.
வாழ்க்கை நிகழ்வு:
மிடில் க்ளாஸ் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் கஷ்டப்பட்டுதான் திரைதுறையில் பிரபலமடைந்துள்ளார் வாணி போஜன். இந்த நிலையில் அவருக்கு ஏர் ஹோஸ்டர்ஸாக வேலை கிடைத்தது. சில வருடங்கள் அந்த வேலையை பார்த்து வந்தார்.
அதற்கு பிறகு இவருக்கு அந்த நிறுவனத்தில் மேனாஜர் ஆவதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மேனாஜர் ஆவதற்கு டிகிரி ஒரு தகுதியாய் பார்க்கப்பட்டது. வாணி போஜன் டிகிரி பெறவில்லை. இதனால் அவருக்கு மேலாளர் பதவி தர முடியாது என கூறியதோடு அவரை தர குறைவாக பேசியுள்ளனர் அந்த நிறுவனத்தினர்.
இதனால் அந்த நிறுவனத்தில் வேலையில் இருந்து நின்றுவிட்டேன் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார் வாணி போஜன்.