Connect with us

எனக்கும் அரசியல் ஆசை இருக்கு – ஓப்பனாக போட்டுடைத்த வாணி போஜன், இப்பவே இப்படியா?

News

எனக்கும் அரசியல் ஆசை இருக்கு – ஓப்பனாக போட்டுடைத்த வாணி போஜன், இப்பவே இப்படியா?

Social Media Bar

சின்னத்திரையில் நடித்துக்கொண்டிருந்த போதே பல ரசிகர்களை கைக்குள் போட்டு வைத்திருந்தவர் வாணி போஜன். அதனை தொடர்ந்து வெள்ளித்திரைக்குள் அடி எடுத்து வைத்த வாணி போஜன், “ஓ மை கடவுளே” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக ஆகிப்போனார்.

அதனை தொடர்ந்து “லாக்கப்”, “மிரல்” போன்ற திரைப்படங்களில் நடித்த வாணி போஜன், “செங்களம்” வெப் சீரீஸில் முன்னணி கதாநாயகியாக அசத்தலாக நடித்து ரசிகர்களின் ஏகபோக ஆதரவை பெற்றார். “செங்களம்” வெப் சீரீஸ் வாணி போஜனின் கெரியரில் ஒரு திருப்புமுனையான வெப் சீரீஸாக வலம் வந்தது.

தற்போது “பகைவனுக்கு அருள்வாய்”, “கேசினோ” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள வாணி போஜன், “ஆர்யன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஹாட்ஸ்டார் தயாரிக்கும் “சட்னி சாம்பார்” என்ற வெப்சீரீஸிலும் வாணி போஜன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் வாணி போஜன் சமீபத்தில் சென்னையில் ஒரு நகை கடை விழாவில் கலந்துகொண்டார். அப்போது நிருபர்கள் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியது குறித்து கருத்து கேட்டனர்.

அதற்கு பதிலளித்த வாணி போஜன், “நல்லது செய்யவேண்டும் என நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அரசியலுக்கு வரலாம். செங்களம் வெப் சீரீஸில் நடித்துக்கொண்டிருந்தபோது எனக்கு அரசியல் ஆசை வந்தது. இப்போதும் அந்த ஆசை இருக்கிறது. விஜய்க்கு நாம் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். அவர் என்ன செய்கிறார் என பார்க்கலாம்” என கூறியுள்ளார்.

விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்த பிறகு சமூக வலைத்தளங்களில் அது குறித்த விவாதங்களே அதிகம் இடம்பெறுகிறது. சினிமாத்துறையைச் சார்ந்தவர்கள், அரசியல் விமர்சகர்கள் என பலரும் விஜய் கட்சித் தொடங்கியது குறித்து பற்பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியது குறித்து வாணி போஜன் கூறியுள்ள கருத்து இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தாலும் அவர் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்தது பலருக்கும் வருத்தத்தையே அளித்தது. இந்த நிலையில் வாணி போஜன் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதை வரவேற்த்துள்ளார் என தெரிய வருகிறது.

To Top