Connect with us

காதல் மட்டுமில்லாமல்   நிச்சயதார்த்ததையும் மறைத்த பிரபல நடிகை!  மாப்பிளை யார் தெரியுமா?

varalaxmi_sarathkumar_

Latest News

காதல் மட்டுமில்லாமல்   நிச்சயதார்த்ததையும் மறைத்த பிரபல நடிகை!  மாப்பிளை யார் தெரியுமா?

Social Media Bar

நடிகர் சரத்குமாரின் மகளும், தமிழ் சினிமாவின் முக்கிய  ஹீரோயினுமான வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையை சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

தமிழில் பல படங்களில் காதாநாயகியாக  நடித்திருந்தாலும் சர்க்கார், சண்டக்கோழி 2 போன்ற படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தது மூலமே  அனைத்து தரப்பு மக்கள் கவனத்தையும் ஈர்த்தார்.

இவருக்கும் பிரபல தொழில் அதிபரான நிக்கேலாய் சச்தேவ் இடையே கடந்த 14 ஆண்டுகள் பழக்கம் இருந்த நிலையில்,  தற்போது இருவரின் பெற்றோர்கள் சம்மதத்துடன் மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளனர். 

கடந்த 1ஆம் தேதி குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்க  இவர்கள் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.  காதல் மட்டுமில்லாமல் நிச்சயதார்த்தமும் யாருக்கும் தெரியாமல் நடந்தாலும், இன்று அது குறித்து முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  இவர்களது திருமணத்தை இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 நடிகர் விஷாலும் வரலட்சுமியும் காதலித்து வருவதாக வதந்திகள் பரவிய நிலையில், அதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்து நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாகவே இருக்கிறோம் என்றும்  தெரிவித்தனர். ஆனால், உண்மையில் காதலித்து வருபவர் பற்றி எள்ளளவும் கசியாமல் காத்துக் கொண்டிருந்துருக்கிறார் அம்மணி. 

ஆர்ட் கேலரி நடத்தி வரும்  நிக்கேலாய் சச்தேவும் வரலட்சுமி சரத்குமாரும் 14 ஆண்டுகள் காதலித்து வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் அந்த காதல் திருமணத்தில் முடிய போவது ஆனந்தம் . 

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top