News
வாரிசு செகண்ட் சிங்கிள் நான் பாடுறேன்? – விஜய்க்கு முதன் முதலாக பாடிய எஸ்.டி.ஆர்
நடிகர்கள் பாடல்கள் பாடுவது என்பது தமிழ் சினிமாவில் ஒரு இயல்பான விஷயமாகிவிட்டது. பல நடிகர்கள் தங்கள் படங்களில் ஒரு பாடலாவது பாடுவது உண்டு.

அதில் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் தனுஷ் மற்றும் சிம்பு, இருவருமே நன்றாக பாடக்கூடிய நடிகர்கள். இருவருமே ஒரு பாடல் பாடினால் அந்த பாடல் ஹிட் ஆகிவிடும் என கூறலாம்.
தனுஷ் தொடர்ந்து தனது படங்களில் ஒரு சில நேரங்களில் பாடல்கள் பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் சிம்பு பாடல் பாடி வெகு நாட்கள் ஆகிவிட்டது. ஒரு காலத்தில் ஆல்பம் பாடல்கள் எல்லாம் பாடிய சிம்பு இப்போது ஏன் ஒரு சில பாடல்கள் மட்டுமே பாடுகிறார் என ரசிகர்களே ஐயத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் தற்சமயம் வாரிசு படத்தில் என் பங்குக்கு ஒரு பாடலை பாடுகிறேன் என களம் இறங்கியிருங்கி ஒரு பாடலை பாடியுள்ளார் சிம்பு. வாரிசு படத்திற்கு தளபதியின் மொத்த ரசிக பட்டாளமும் காத்துக்கொண்டுள்ளது.
அதன் முதல் சிங்கிளான ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலே ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட்டாக அமைந்தது. விஜய் அந்த பாடலை பாடியதால் அந்த பாடல் சிறப்பான பாடலாக ஆனது.
இந்த நிலையில் இரண்டாவது சிங்கிளாக சிம்பு பாடிய பாடலை வெளியிட உள்ளனர். இதுவரை சிம்பு, விஜய்க்கு எந்த ஒரு பாடலும் பாடி தந்தது இல்லை. இதுவே முதல் முறை. இதனால் இந்த பாடலுக்காக சிம்பு ரசிகர்களும் காத்துக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்சமயம் #VarisuSecondSingle என்கிற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.
