பெரும் போட்டியுடனும் எதிர்பார்ப்புடனும் தயாராகி வரும் திரைப்படம் வாரிசு. அஜித் நடிக்கும் துணிவிற்கு எதிராக இந்த படத்தை வெளியாக இருக்கிறது. இரண்டு திரைப்படங்களில் எது அதிக வசூல் சாதனை செய்கிறதோ அதுவே வெற்றி படமாக இருக்கும்.

எனவே இரு தரப்பினரும் கடும் போட்டியில் உள்ளனர். மக்கள் மத்தியில் இந்த இரு படங்களை பற்றிய பேச்சுக்கள் வேறு விதமாக இருந்தது. அதாவது வாரிசு என இருப்பதால் விஜய் படம் ஒரு குடும்ப கதையாக இருக்கலாம். துணிவுதான் ஆக்ஷன் படமாக இருக்கும் என்ற பேச்சு இருந்தது.
அதற்கு ஏற்றாற் போல வாரிசு படம் தொடர்பாக வெளியான புகைப்படங்களில் கூட அவர் தனது குடும்பத்துடன் இருப்பது போன்ற காட்சிகளை பார்க்க முடிந்தது. இந்நிலையில் இதையறிந்த படக்குழு பெரும் சண்டை காட்சி ஒன்றை எடுத்து வருகிறதாம்.
அந்த சண்டைக்காட்சிக்காக 40க்கும் அதிகமான லாரிகள், 10க்கும் அதிகமான ஜே.சி.பிக்கள் ஆகியவற்றை கொண்டு இந்த சண்டை காட்சிகள் மட்டும் எடுக்கப்படுகிறதாம்.
எந்த வகையில் இந்த படம் துணிவிற்கு குறைவானதாக இருக்க கூடாது என போராடி வருகிறார் தளபதி. ஆனால் இதை பற்றியெல்லாம் கவலை படாமல் உலக சுற்றுலா கிளம்ப தயாராகி கொண்டிருக்கிறார்