இந்த நடிகைக்காக உலக அழகியவே விவாகரத்து செஞ்சாரா? பயில்வான் ரங்கநாதன் சொன்ன பகீர் சீக்ரெட்!
போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் வரலட்சுமி, தற்போது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழியிலும் பிஸியாக நடித்து வருகிறார். இவருக்கும் மும்பை தொழிலதிபர் ஒருவருக்கும் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல், மும்பையில் திடீரென நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில், சரத்குமாரின் முதல் மனைவி சாயா தேவி, சரத்குமார், ராதிகா சரத்குமார், ராதிகாவின் மகள் ரேயான் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த நிச்சயதார்த்தம் இணையத்தில் பேசுபொருளாக மாறிவிட்ட நிலையில், இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பயில்வான் ரங்கநாதன் பேட்டி அளித்துள்ளார்.
அதில், வரலட்சுமி சரத்குமார் இப்போது மட்டுமில்லை, ஐந்து வருடத்திற்கு முன்பே விஷால் அளித்த பேட்டியின் மூலம் பேசு பொருளாக மாறிவிட்டதாக கூறியுள்ளார். விஷால் வரலட்சுமி இருவரும் லிவ்விங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்ததாகவும் நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கும் சரத்குமாருக்கும் ஏற்பட்டமோதலால், இருவரும் பிரிந்து விட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.
தற்போது வரலட்சுமி சரத்குமாருக்கு 39 வயதும் அவரது வருங்கால கணவர் நிகோலாய் சச்தேவ்விற்கு 41 வயதாகிறது. தொழிலதிபரான இவர் மும்பையில் பெரிய ஆர்ட் கேலரி ஒன்றை வைத்து இருக்கிறார். அப்பா, அம்மா தொடங்கிய தொழிலை நிகோலாய் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், அவருக்கு15 ஆண்டுகளுக்கு முன்பே கவிதா என்பவருடன் திருமணம் நடந்து விட்டதாகவும் கவிதா கலிபோர்னியா நாட்டு உலக அழகி எனவும் பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சி தகவலை கொடுத்துள்ளார். ஏற்கனவே நிகோலாய் சச்தேவ்விற்கும் கவிதாவிற்கும் விவாகரத்து ஆகிவிட்டதால் வரலட்சுமிக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. இருந்தாலும் இவர்களுக்குள் ஈகோ தலைகாட்டாமல் இருந்தால் சரி என பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
இது வரை எந்த வித பிரச்சனையும் இல்லாத வரலட்சுமி சரத்குமார் நிகாயதார்தம் விட பயில்வான் ரங்கநாதனின் பேட்டிதான் தற்போது பேசு பொருளாகி வருகிறது.