Rajinikanth and veerappan : தமிழ்நாட்டில் மக்களால் மிகப்பெரும் போராளியாகவும், அரசால் மிகப்பெரும் தீவிரவாதியாகவும் பார்க்கப்பட்ட நபர்களில் வீரப்பன் முக்கியமானவர். சத்தியமங்கலம் காடுகளில் ஆரம்பத்தில் யானைகளை கொன்று தந்தங்களை கடத்தி வந்த வீரப்பன். அதன் பிறகு தொடர்ந்து சந்தன கட்டைகளை கடத்த துவங்கினார்.
இதற்காக அரசு பெரும் செலவு செய்து அவரை பிடித்து கொன்றது. ஆனால் இறுதி வரை காட்டுக்குள் வைத்து வீரப்பனை பிடிக்கவே முடியவில்லை என்பது தனி செய்தி. காட்டுக்குள்ளேயே இருந்து வந்தாலும் கூட தொடர்ந்து வெளி உலக செய்திகளை வீரப்பன் கேட்டுக்கொண்டுதான் இருந்தார்.
முக்கியமாக தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் விவகாரங்கள் குறித்து எப்போதும் அப்டேட்டாக இருந்துள்ளார் வீரப்பன். வீரப்பன் குறித்து தற்சமயம் ஜீ5 நிறுவனம் ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில் வீரப்பனை நேரில் சென்று பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் எடுத்த வீடியோக்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

அதில் அரசு செய்த பல குற்றங்களை வீரப்பன் கூறியுள்ளார். அப்போதைய காலக்கட்டத்தில் அடுத்து யார் முதல்வராகலாம் என வீரப்பன் கூறும்போது கருணாநிதி, வைக்கோ,ராமதாஸ், கம்யூனிஸ்ட் கட்சி இவர்களில் யாரை வேண்டுமானாலும் முதல்வராக்கலாம். ஆனால் ஜெயலலிதாவை ஆக்க கூடாது. அவரால்தான் என் ஊர் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள் என்கிறார் வீரப்பன்.
மேலும் அவர் கூறும்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும். எம்.ஜி.ஆருக்கு பிறகு நல்ல மனது கொண்ட நபராக ரஜினிகாந்த் இருக்கிறார். அவருக்கு நிறைய தெய்வ பக்தியும் இருக்கிறது என கூறியவர் ரஜினிக்கும் அட்வைஸ் கொடுத்துள்ளார். உனக்கு நிறைய மக்கள் செல்வாக்கு இருப்பதால் கட்சிகள் உன்னை பயன்படுத்திக்கொள்ள பார்க்கின்றன.
நீ தேர்தலுக்கு வருவதாக இருந்தால் தனியாக கட்சி ஆரம்பித்து போட்டியிடு. யாரையும் கூட சேர்த்துக்கொள்ளாதே என அறிவுரை வழங்கியுள்ளார் வீரப்பன். ஏனெனில் அப்போதைய காலக்கட்டத்தில் ரஜினிகாந்த் கட்சி துவங்கலாமென்ற முடிவில் இருந்து வந்தார். அவர் அரசியலுக்கு வருவார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர்.






