வெற்றிமாறன் சிம்பு கூட்டணியில் திரைப்படம் உருவாக வேண்டும் என்பது வெகு காலங்களாகவே பலரது ஆசையாக இருந்து வந்தது. ஏனெனில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படங்கள் மற்ற தமிழ் படங்களில் இருந்து வித்தியாசமானதாக இருக்கும்.
வெறுமனே ஆக்ஷன் திரைப்படங்கள் என்று இல்லாமல் படம் பேசும் அரசியல் மிக முக்கியமானதாக இருக்கும். வட சென்னை விசாரணை மாதிரியான வெற்றிமாறனின் ஒவ்வொரு திரைப்படமும் மக்கள் மத்தியில் மிக முக்கியமான விஷயத்தை பேசக் கூடியதாக இருந்து இருக்கிறது.

இந்த நிலையில் அடுத்து நடிகர் சிம்புவை வைத்து அரசன் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்த நிலையில் சிம்பு பேசும்பொழுது நானும் சிம்புவும் பொல்லாதவன் நான் எடுத்த காலத்தில் இருந்தே பேசிக்கொண்டு இருக்கிறோம்.
அப்பொழுது சிம்பு காளை திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் அப்போதிலிருந்து அவர் என்னுடைய படத்தில் நடிப்பது குறித்த பேச்சு வார்த்தை என்பது நடந்து கொண்டுதான் இருந்தது ஆனால் இப்பொழுது தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது என்று கூறியிருக்கிறார் வெற்றிமாறன்.
 
			 
			





