Connect with us

தனுஷ் மட்டும்தான் எங்களுக்கு எல்லாமே!.. மனம் நெகிழ்ந்த தனுஷ் அம்மா!..

vetrimaaran dhanush

Cinema History

தனுஷ் மட்டும்தான் எங்களுக்கு எல்லாமே!.. மனம் நெகிழ்ந்த தனுஷ் அம்மா!..

Social Media Bar

Actor Dhanush and Vetrimaaran: தமிழ் சினிமாவில் சில படங்கள் நடிகர் இயக்குனர் இருவரையுமே வாழவைக்கும் திரைப்படமாக அமையும். உதாரணமாக கூற வேண்டும் என்றால் சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்தை கூறலாம்.

சினிமாவிற்கு அறிமுகமான எஸ்.ஏ சந்திரசேகருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்தபோது விஜயகாந்த்தை வைத்து அவர் இயக்கிய திரைப்படம் சட்டம் ஒரு இருட்டறை.

அதே சமயத்தில்தான் விஜயகாந்த் சினிமாவிற்கு அறிமுகமாக இருந்தார் அதனால் விஜயகாந்திற்குமே கூட பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல்தான் இருந்தது. இந்த நிலையில் வெளியான சட்டம் ஒரு இருட்டறை எதிர்பார்த்ததை விட பெரும் வெற்றியை கொடுத்ததோடு இந்த இருவரையுமே சினிமாவில் பெரும் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

அதேபோல தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவருக்குமே ஒரு பெரும் வெற்றி படமாக அமைந்த திரைப்படம்தான் பொல்லாதவன். பொல்லாதவன் திரைப்படம் இருவருடைய வாழ்க்கையையுமே பெரிதாக உயர்த்திய திரைப்படம். ஆனால் இதில் ஒரு சின்ன மாற்றம் என்னவென்றால் அதற்கு முன்பே தனுஷ் கொஞ்சம் வளர்ந்த நடிகராகதான் இருந்தார்.

ஆனால் வெற்றிமாறன்தான் அப்பொழுது தமிழ் சினிமாவிற்கு புது இயக்குனராக வந்திருந்தார். இந்த திரைப்படம் அனுபவம் குறித்து வெற்றிமாறனின் தாய் ஒரு பேட்டியில் கூறும் பொழுது இந்த படத்தை வெற்றிமாறன் முதலில் தனுஷிடம்தான் கூறினார்.

அதைக் கேட்ட தனுஷ் சில தயாரிப்பாளர்கள் பெயரை சொல்லி அவர்களிடம் இந்த கதையை கூற சொன்னார். வெற்றிமாறனும் அந்த தயாரிப்பாளர்களிடம் கதையை கூறினார். அந்த கதையை கேட்ட பல தயாரிப்பாளர்கள் தனுஷிடம் பேசும் பொழுது கதை நன்றாகதான் இருக்கிறது.

ஆனால் இவர் புது இயக்குனராக இருக்கிறார். அதனால் வேறு ஒரு இயக்குனரை வைத்து இந்த படத்தை எடுத்தால் என்ன என்று கேட்டிருக்கின்றனர். ஆனால் தனுஷ்தான் பிடிவாதமாக வெற்றிமாறன் இந்த படத்தை இயக்கட்டும் என்று ஒற்றை காலில் நின்றார். இப்போது வரை எங்கள் குடும்பத்தின் மீது மாறாத அன்பு கொண்டவர் தனுஷ் என்று கூறுகிறார் வெற்றி மாறனின் தாய்.

To Top