News
ஒ.டி.டிய நம்பி படம் பண்ணக்கூடாது!.. கோட் படத்தைதான் சொல்றாரா வெற்றிமாறன்!..
Vetrimaaran: தமிழில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெற்றிமாறன். அவர் இயக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகமாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் அடிக்கடி சமூக அரசியல் சார்ந்தும் குரல் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் வெற்றிமாறன்.
வெற்றிமாறன் இயக்கும் திரைப்படங்கள் கூட பெரும்பாலும் சமூக கருத்துக்களை பேசும் வகையிலேயே அமைகின்றன. அவர் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை திரைப்படம் கூட தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அலையை ஏற்படுத்தியிருந்தது.
அன்னப்பூரணி திரைப்படம் குறித்து பேசும்போது கூட அதை ஓடிடியில் நீக்கியது குறித்து எதிர்ப்பு தெரிவித்திருந்தார் வெற்றிமாறன். இந்த நிலையில் தற்சமயம் சினிமாவில் இருக்கும் ஒரு பிரச்சனையை பற்றி வெற்றிமாறன் சரியாக பேசியுள்ளார்.

முன்பெல்லாம் திரைப்படம் என்பது திரையரங்குகளில் தரும் வெற்றியை கணக்கு பண்ணிதான் வெளியாகும். ஆனால் இப்போதெல்லாம் திரைப்படங்கள் ஓ.டி.டி மற்றும் சாட்டிலைட் உரிமத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றனர். ஐந்து கோடியில் ஒரு படம் எடுக்கிறார்கள் என்றால் அதில் ஓ.டி.டி சேட்டிலைட் மூலமாகவே அந்த 5 கோடியை பெற்றுவிடுகின்றனர்.
அதற்கு பிறகு திரையரங்குகளில் ஓடுவதை வைத்து தனியாக லாபம் பார்க்கின்றனர். இதனால் ஒருவேளை படத்திற்கு ஓ.டி.டியில் நல்ல தொகை கிடைக்கவில்லை என்றாலோ அல்லது ஓ,டிடி நிறுவனங்கள் வாங்க மறுத்தாலோ அது படம் வெளியாவதிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது என கூறினார் வெற்றிமாறன்.
அதற்கு தகுந்தாற் போல விஜய் நடிக்கும் கோட் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்குவதில் ஏதோ பிரச்சனை இருப்பதாக பேச்சுக்கள் உள்ளன. ஓ.டி.டி விற்பனைக்கு பிறகுதான் கோட் திரையரங்கிற்கு வரும் எனவும் கூறப்படுகிறது.
