Tamil Cinema News
யாரும் உங்களை ஒண்ணும் பண்ண முடியாது.. ஆனா எப்ப இதை நிறுத்த போறீங்க.. ராதிகாவுக்கு பதில் கேள்வி வைத்த விசித்ரா..!
கிழக்கே போகும் ரயில் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ராதிகா. அதற்குப் பிறகு ராதிகா நிறைய பட வாய்ப்புகளை பெற்றார்.
கருப்பு நிறத்தில் இருப்பது எல்லாம் நடிப்பதற்கு ஒரு தடையில்லை என்று தமிழ் சினிமாவில் நிரூபித்த நடிகைகளில் நடிகை ராதிகாவும் ஒருவர். தமிழை தாண்டி மாற்று மொழி படங்களிலும் நிறைய நடித்திருக்கிறார் ராதிகா.
மேலும் அதற்குப் பிறகு அவர் சீரியலிலும் கவனம் செலுத்த தொடங்கினார். ஏனெனில் பொதுவாகவே சினிமாவில் ஒரு வயதுக்கு பிறகு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் என்பது குறைந்துவிடும் .
ராதிகாவுக்கு வரவேற்பு:
அந்த சமயத்தில் சீரியலை தேர்ந்தெடுத்து சின்னத்திரையிலும் அதிக வரவேற்பு பெற்றார் ராதிகா. இவர் நடித்த சித்தி மாதிரியான சீரியல்கள் அப்பொழுது எக்கச்சக்கமான வரவேற்பு பெற்றது. இதற்காகவே சீரியல் தயாரிப்பு நிறுவனத்தையும் உருவாக்கி அதன் மூலமும் நல்ல வரவேற்பு பெற்று வந்தார்.

இவர் ஒரு பேட்டியில் பேசும் பொழுது தொடர்ந்து என்னைப் பற்றி அவதூறாக நிறைய எழுதுகிறார்கள். பேசுகிறார்கள் எனக்கு அதைப் பற்றி எல்லாம் எந்த ஒரு கவலையும் கிடையாது. ஏனெனில் இதையெல்லாம் எனது குடும்பம் நம்ப போறது கிடையாது என்று ராதிகா கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் நடிகை விசித்ரா சமீபத்தில் பேசும்பொழுது உங்களை யாரும் ஒன்னும் பண்ண முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் தொடர்ந்து சினிமா பிரபலங்களை அவதூராக பேசிக் கொண்டே இருக்கிறார்கள். நீங்கள் அதை கண்டு கொள்ளாமல் இப்படி இருந்து விட்டால் அவர்கள் அதை மறுபடி மறுபடி செய்து கொண்டிருப்பார்கள். அப்படி என்றால் இதை எப்படி நீங்கள் நிறுத்தப் போகிறீர்கள் ஒரு சீனியர் நடிகையாக இவர்களுக்கு இந்த பொறுப்பு இல்லையே என்று அதற்கு கருத்து தெரிவித்திருந்தார் விசித்ரா
