Connect with us

என்ன பேசக்கூடாதுன்னு சொல்ல நீங்க யாரு? – பிக்பாஸையே வெளுத்த விசித்திரா!

vichitra kamal

Bigg Boss Tamil

என்ன பேசக்கூடாதுன்னு சொல்ல நீங்க யாரு? – பிக்பாஸையே வெளுத்த விசித்திரா!

Social Media Bar

Bigg boss tamil season 7: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடரில் நாளுக்கு நாள் சண்டைகளும், துரோகங்களும், ஏமாற்றங்களும் பெருகிக் கொண்டே வருகின்றது. அதிகம் டாஸ்க் நடப்பதில்லை என ஆடியன்ஸ் குறைபட்டு கொண்ட நிலையில் இன்று ஒரு டாஸ்க் நடத்தப்பட்டது. அதில் ஹவுஸ்மேட்ஸ் தான் எந்த வகையில் இந்த வீட்டையும், ஆடியன்ஸையும் எண்டெர்டெயின் செய்து வருகிறோம் என்பதை பேச வேண்டும்.

அதில் வெற்றி பெறுபவர்கள் ஒரு ஸ்டார் பெறுவார்கள். இந்த டாஸ்க்கில் பலரும் தங்கள் அனுபவங்களை சுவார்ஸ்யமாக விவரித்து வந்தனர். விசித்திராவும் அவ்வாறு பேச தொடங்கி ஆனால் அதை ரொம்ப எமோஷனலாக பேசிக் கொண்டிருந்தார். அதனால் நேரம் முடிவதற்கான பஸ்ஸரை பிக்பாஸ் சில நிமிடங்களிலேயே அடித்து விட்டார்.

இதனால் கடுப்பான விசித்திரா கேமரா முன் சென்று பிக்பாஸிடமே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். “பேசுறது என்னோட உரிமை. நான் பேசிட்டு இருக்கும்போதே எப்படி நீங்க பஸ்ஸர் அடிக்கலாம். நீங்க பண்றது ரொம்ப தப்பு பிக்பாஸ். இந்த சின்ன பசங்க மத்தியில என்னை தனிமைப்படுத்துற மாதிரி நீங்க செய்றீங்க. நீங்க என்ன பேச விடலைன்னா அவ்ளோ கஷ்டப்பட்டு இதுல நான் இருக்கணும்னு அவசியமே இல்ல” என்று கொட்டி தீர்த்துள்ளார்.

To Top